Advertisment

ஜே.என்.யு தாக்குதல் : வன்முறையில் ஈடுபட்ட அந்த பெண் யார்?

டெல்லி யுனிவர்சிட்டியில் படிக்கும் அப்பெண் ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JNU violence: Police identify masked woman in video

JNU violence: Police identify masked woman in video

JNU violence: Police identify masked woman in video : டெல்லி குற்றவியல் காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை தாக்குதல் குறித்து விசாரணை செய்து வருகிறது. ஜனவரி 5ம் தேதி அந்த பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கண்ணில் பட்ட மாணவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதில் மாணவர்கள் சங்க தலைவர், பேராசியர்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான தாக்குதல்களை சந்தித்தனர். மொத்தமாக 34 நபர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

Advertisment

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

மேலும் படிக்க : கடந்த வருடம் ஜனாதிபதி விருது! இந்த வருடம் பயங்கரவாதிகளுடன் கைது… பரபரப்பை ஏற்படுத்திய தேவிந்தர் சிங்!

இந்த தாக்குதல் தொடர்பாக வீடியோக்கள் கடந்த 6ம் தேதி மாலையில் இருந்து வெளியாக துவங்கியது. அதில் ஒரு பெண் கையில் பெரிய தடி வைத்துக் கொண்டு இரண்டு ஆண்களுடன் மாணவர்களை தாக்கும் வீடியோவும் அடங்கும். சபர்மதி விடுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈடுபட்ட பெண் யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி அவர் என்று அறிவித்த காவல்துறையினர் அப்பெண்ணின் பெயரை அறிவிக்கவில்லை. ஆனால் அந்த பெண் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இடது சாரி அமைப்புகள் வெளியிட்ட வீடியோக்களின் அடிப்படையில் அப்பெண் யார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்த அந்த பெண், நீல நிற ஸ்கார்ப் அணிந்திருந்தார். இந்த வீடியோவை ஷூட் செய்தவர் “இந்த பெண் தான், தான் ஜே.என்.யு மாணவி என்று கூறியவள். ஆனால் யாருக்கு தெரியும்” என்று கூறியது வரை அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில் வடக்கு கேம்பஸ் பகுதியில் இந்த பெண் வாழ்ந்து வருவதாகும், தற்போது அவருடைய வீட்டிற்கு சென்று விசாரித்தால் அவர் அங்கே இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். மேலும் அவருடைய செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரிக்கப்படுவார் என்றூம் அவர் கூறியிருந்தார். இந்த பெண்ணை விசாரித்தால் அந்த இரண்டு ஆண்களும் யார் என்பது தெரிய வரும் என்றார். கடந்த வெள்ளிக்கிழமை க்ரைம் ப்ராஞ்ச் காவல்துறை டி.சி.பி. வெளியிட்ட அறிக்கையில் இந்த விவாகரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மொத்தம் 8 பேர் என்றும் அதில் 6 நபர்கள் இடதுசாரி அமைப்புகளான FI, AISA, AISF and DSF சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். மீதம் உள்ள இருவர்கள் ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களின் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ஜே.என்.யு வன்முறை விவகாரம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விவாத பொருளாகும் டெல்லி காவல்துறை!

Jnu University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment