Advertisment

நீதிபதி முதல் செயலாளர் வரை; அதிகாரமிக்க நகரில் அனைவரையும் சோர்வடைய வைத்த பற்றாக்குறை

எம்.பி.க்கள், நீதிபதிகள், உயர்மட்ட அதிகாரிகளின் அதிகாரங்கள் அனைத்தையும் பொய்யாக்கியது இந்த கோவிட்19 இரண்டாம் அலை.

author-image
WebDesk
New Update
Judge to Secy: In city of power almost powerless in the face of scarcity

 Krishn Kaushik

Advertisment

Judge to Secy : அதிகாரம் மிக்க இந்த நகரில் சிலருக்கு பற்றாக்குறை என்பது ஒரு பொருட்டாக இருக்காது. சிலர் உதவிகள் கேட்டிருப்பார்கள். சிலர் அதிகாரம் மிக்க நபர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார்கள். ஆனால் தொடர்ந்து அதிகரித்து வ்வரும் கொரோனா தொற்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கை வசதிகள் ஆகியவை அதிகாரத்தின் சமன்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ளது.

சில முக்கிய வி.ஐ.பிகள் இன்னும் இறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் சமூக வட்டாரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கான எஸ்.ஒ.எஸை அதிகரிக்கின்றனர். ஆனால் பற்றாக்குறையும் அதிகரித்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையும் மேற்கூறியவற்றை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

அரசியலமைப்பு அதிகாரத்தின் பிரிவு ஒன்றின் தலைவர், நீதித்துறை உயர் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் தங்களுக்காகவோ அல்லது தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்காகவோ மருத்துவமனை மற்றும் மருந்துகளை பெற சிரமப்பட்டனர் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் உறுதி செய்துள்ளது. சிலருக்கு அவர்களுக்கு தேவையான உதவிகள் அவர்களின் சமூக வலைதளங்களின் தாக்கத்தினால் பெறப்பட்டது. கொரோனா தொற்று அதிகரிக்க அதிகரிக்க சவால்களும் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தாமாக முன்வந்து பேசாதவர்கள் தவிர மற்றவர்களின் பெயர்கள் பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. அரசியலமைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தன்னுடைய குடும்ப உறுப்பினருக்காக மருத்துவமனை படுக்கை ஒன்றை தேடினார். அரசியல் தலைவர் ஒருவரை அணுகிய பின்னர் தான் அவருக்கான உதவி கிடைத்தது. ஆனால் அவர் விரும்பிய மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கவில்லை.

தற்போது இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு தன்னுடைய உறவினருக்காக படுக்கை ஒன்றை தேடினார். ஆனால் அதிக போராட்டத்திற்கு பிறகே அது கிடைத்தது.

தன்னுடைய மனைவிக்கு டோசிலிஜுமாப் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வழக்கறிஞர்கள் உட்பட பலருக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பினார் டெல்லியில் வசிக்கும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி.

உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரிக்கு, ஒரு மருத்துவமனை படுக்கை தேவைப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் டிஆர்டிஓ மருத்துவமனையில் ஒன்றை ஏற்பாடு செய்ய பலரிடம் தொலைபேசியில் உரையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பணியாற்றிய ஒரு உயர்மட்ட பொருளாதார வல்லுனருக்கு கடந்த வாரம் டெம்டெசிவிர் தேவைப்பட்டது. அவருடைய நண்பர்கள் ட்விட்டரில் பதிவிட்டு அந்த உதவியை அவருக்கு கிடைக்கும் படி செய்தனர்.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், ஆர்எஸ்எஸ்ஸின் பஞ்சஜான்யாவின் முன்னாள் ஆசிரியருமான தருண் விஜய், உறவினருக்கு படுக்கையைத் தேடும் போது தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா; சோதனைக் கூட்டங்கள் எண்ணிக்கை எவ்வளவு?

ஏப்ரல் 23ம் தேதி அன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய உறவினர் 91 வயது. ப்ளாஸ்மா கிடைக்கவில்லை. சிலிண்டர் கிடைக்கவில்லை. வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டியது தானே என்று மருத்துவர்கள் கேட்டனர். எந்த வித தொடர்பும், செல்வாக்கும் இல்லாதவர்கள், சாதாரணமானவர்களின் நிலை என்ன? என்றார்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் அவர், தன்னுடைய உறவினர் இறந்துவிட்டதாகவும், அவரின் கடைசி தருணங்களை கண்டு அழுததாகவும் கூறினார்.

நவாப்கஞ்சை சேர்ந்த கேஜர் சிங் பாஜக எம்எல்ஏ, கொரோனா நேர்மறை உறுதி செய்யப்பட்ட 8 நாட்கள் கழித்து, ஏப்ரல் 10ம் தேதி அன்று, சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அவருக்கு மேக்ஸ் மருத்துவமனையில் இடம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அவருக்கு அங்கே இடம் கிடைக்கவில்லை. அதனால் அவர் நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் புதன்கிழமை அவர் உயிரிழந்தார்.

வியாழக்கிழமை, மத்திய அரசு செயலாளர் ஒருவர் சக ஊழியருக்கு உடனடியாக ஆக்ஸிஜன் படுக்கை தேவை என்று உதவி கோரி ட்வீட் செய்தார். அந்த ட்வீட் பின்னர் நீக்கப்பட்டது.

அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலருடன் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், தனது குடும்பத்திற்கு உதவி தேவைப்பட்டால் எங்கு செல்வது என்பது தனக்குத் தெரியாது என்று ஒப்புக்கொண்டார் மூத்த அரசு அதிகாரி. அவருக்கு பாஸிட்டிவ் உறுதி ஆவதற்கு முன்பு அவருடைய உறவினர்கள் உதவி வேண்டி இவருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் இந்நேரத்தில் நான் எங்கே செல்வேன் என்று தெரியவில்லை. எந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்னுடைய அழைப்பை ஏற்பார் என்றும் தெரியவில்லை என்றார்.

பெரிய கொரோனா சிகிச்சை மையத்தின் தலைமை மருத்துவர் ஒருவர், தன்னுடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃபில் இருப்பது தான் நல்லது என்று கூறினார். யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக எனக்கு அழுத்தம் தருவதை நான் தவிர்க்க விரும்புகிறேன். யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் முடிவு செய்யட்டும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment