Advertisment

டெல்லி ரகசியம்: தொடர் கேள்விகள்... உச்ச நீதிமன்றத்தில் நிதானத்தை இழந்த நீதிபதி சந்திரசூட்

கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான இரண்டு விஷயங்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், அவரது சமர்ப்பிப்புகளை ஏன் பெஞ்ச் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
டெல்லி ரகசியம்: தொடர் கேள்விகள்... உச்ச நீதிமன்றத்தில் நிதானத்தை இழந்த நீதிபதி சந்திரசூட்

உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட், தினந்தோறும் தனது நிதானத்தை இழப்பது கிடையாது. ஆனால், செவ்வாய்யன்று, கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான இரண்டு விஷயங்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், அவரது சமர்ப்பிப்புகளை ஏன் பெஞ்ச் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதால், நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

Advertisment

நீதிமன்றத்தில் பேசிய அந்த வழக்கறிஞர், சாதாரண மனிதர்கள் என்ன நினைப்பார்கள். தடுப்பூசி சிண்டிகேட்டை அம்பலப்படுத்துபவர்களின் வாதங்களை நீதிமன்றம் கேட்கவில்லை. ஆனால் தடுப்பூசிக்கு ஆதரவானவர்களை மட்டும் கேட்கிறதா? போன்ற கேள்விகளை அடுக்கினார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி சந்திரசூட், எங்களுக்கு உங்களிடமிருந்து சான்றிதழ் தேவையில்லை. பார் உட்பட அனைத்து விமர்சனங்களையும் ஏற்கும் அளவுக்கு எங்கள் தோள்கள் பரந்தவை. நாங்கள் எங்கள் அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றுகிறோம்" என்றார்.

இந்தியா வருகை

COP26 இன் தலைவரும், பிரிட்டிஷ் அமைச்சரவை அலுவலகத்தில் ஒரு அமைச்சருமான அலோக் ஷர்மா, பிப்ரவரி 10 முதல் 13 வரை இந்தியாவுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாஸ்கோவில் COP26 ஐ ஏற்பாடு செய்த பிறகு அவரது முதல் வருகை இதுவாகும்.

அதே சமயம், கிளாஸ்கோ சந்திப்பின் முடிவில் நிலக்கரியை படிப்படியாக குறைப்பதற்கான இலக்குகளை இல்லாமல் செய்ததற்காக இந்தியா, சீனாவை அவர் திட்டவட்டமாக குற்றம் சாட்டியதால், சர்மாவின் சந்திப்புகள் எவ்வாறு இருக்கிறது என்பதையும், அரசாங்கத்திடமிருந்து என்ன வகையான வரவேற்பைப் பெறுகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

எனர்ஜி டிரன்சிஷன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் பற்றிய கூட்டங்களை நடத்துவதைத் தவிர காலநிலை மாற்ற இலக்குகள் மற்றும் நடைமுறைகள் குறித்து சர்மா விவாதங்களை நடத்த வாய்ப்புள்ளது.

அவர் பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் பிற அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு தினம்

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசத்திற்கு 10 வெவ்வேறு மொழிகளில் தனது பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்த வீடியோவை BSF செவ்வாயன்று வெளியிட்டது. இதற்காக கிழக்கு, மேற்கு மற்றும் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்களின் உதவியை நாடியுள்ளது.

டெல்லிக்கு வெளியே இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜெய்சால்மரில் - தனது எழுச்சி தினத்தை கொண்டாடிய அதன் சமீபத்திய நடவடிக்கையின் எதிரொலியாக, அனைத்து CAPF களை தங்களது எழுச்சி தினத்தை இந்த முறையில் கொண்டாட உள் துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பிராந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்துவதாக மற்ற படைகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Justice D Y Chandrachud Republic Day 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment