8 வயது சிறுமி செய்த தவறு என்ன?? நாடோடி சமூகத்தில் பிறந்ததிற்காக இப்படி ஒரு தண்டனையா???

இந்த கொலையை மறைக்க போலீஸாருக்கு ரூ1.50 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் 8 வயது சிறுமி ரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 8 பேர்  கொண்ட கும்பலால்  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்களை மட்டும் இல்லை,  ஒட்டுமொத்த மக்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ள காஷ்மீரில் ரோஜாவிற்கு நடந்த துயரம். குதிரை மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை  கடத்தி  சென்று,  கோயில் கருவறையில் மூன்று நாட்கள் கட்டி வைத்துள்ளன. அதன் பின்பு அவரின் வாயில் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை  திணித்து  3 நாட்கள்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வலி தாங்காமல் கத்திய சிறுமியின் வாயை துணியால் அடைத்து  மரண வேதனையை அளித்துள்ளனர். கடைசியில் சிறுமி இறந்த பின்பு அவளை தூக்கி வந்து காட்டு பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.  இதை படிப்பவர்கள் மனதில் எழும் ஒரே கேள்வி என்ன நடக்கிறது இந்த நாட்டில்???  என்பது தான்.

ஜனவரி 10 ஆம் தேதி காணமால் போன ஆசிஃபா,  5 நாட்கள் கழித்து பிணமாக கிடைத்துள்ளார். முதலில் இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட  காவல் அதிகாரி, தீபக் கஜூரியா பின்பு  இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது மீண்டும் ஒரு அதிர்ச்சி.

பின்பு, கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தினர்.  அதில் சில பாஜக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். கைதான குற்றவாளிக்காக தேசியக் கொடியுடன் ஊர்வலம் சென்றது அரசியல் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சி ராம், சஞ்சி ராம் மகன் விஷால் ஜங்கோதரா, சஞ்சி ராமின் 17 வயது உறவினர், போலீஸ் அதிகாரி தீபக் காஜுரியா சுரேந்தர் வர்மா, பர்வத குமார் ஆகிய 6 பேரும், அவர்கள் செய்த கொலையை மறைத்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அளித்துள்ள பதில்கள்,  காஷ்மீரில் வாழும்  நாடோடி சமூகத்தினரின்  பரிதாப நிலையை நம் கண்முன் நிறுத்துகிறது. ரோஜாவை கற்பழித்ததற்கான நோக்கம்  நாடோடி சமூகத்தின் மீது அவர்களுக்கு  இருந்த வெறுப்புணர்வே ஆகும். குஜ்ஜர் சமூகத்தை அச்சுறுத்தி ஜம்முவை விட்டு அவர்களை  வெளியேற வைக்கவேண்டும் என்றே இப்படி செய்துள்ளனர். இந்த கொலையை மறைக்க போலீஸாருக்கு ரூ1.50 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.

பல போராட்டங்களை கடந்து தற்போது இந்த விவகாரம் வெளியே தெரிந்து,  8 வயது சிறுமிக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close