Advertisment

மும்மொழிக் கொள்கை, ஆங்கில பரவலாக்கம், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து என்ன சொல்கிறார் கஸ்தூரிரங்கன்?

மும்மொழிக் கொள்கை தொடர்பாக நாங்கள் கொடுக்கப்பட்ட பத்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
National Education Policy committee chairperson Kasturirangan Interview

National Education Policy committee chairperson Kasturirangan Interview

National Education Policy committee chairperson Kasturirangan Interview : முன்னாள் இஸ்ரோ தலைவரும், புதிய கல்விக் கொள்கை திட்டத்தினை உருவாக்கியவருமான திரு. கஸ்தூரிரங்கன் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ!

Advertisment

இந்த திட்டம் தயாரிக்கும் போது நீங்கள் கற்றுக் கொண்டது என்ன ?

இந்தியாவின் இந்த மிகப்பெரிய வளர்ச்சியை நீங்கள் பார்க்கும் போது, இது எங்கிருந்து துவங்கியது என்பதை கண்டும் ஆச்சர்யம் கொள்வீர்கள். இந்திய மிகவும் பழைமை வாய்ந்த நாகரீக வளர்ச்சி அடைந்த நாடு. நூறாண்டுகளுக்கு முன்பே மிகச்சிறப்பான கல்வியை போதித்த நாலந்தா, தாக்‌ஷசீலம் போன்ற கல்வி நிறுவனங்களை கொண்டது. கலை, இசை, பாரம்பரியம், கலாச்சாரம் என அனைத்தையும் இது கற்றுக் கொடுத்தது. இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் காரணங்களை கண்டு பிரமித்துப் போகின்றேன்.

1986/92 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கைகளின் போது இணையம் போன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லை. ஆனால் அதன் பிறகு நான்காவது தொழிற் புரட்சி உருவானது. அதன் தேவைகள் அதிகமாகின. தற்போது இருக்கும் கல்விக் கொள்கை இந்தியாவின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்கின்றதா? இன்று இல்லை. ஆனால் அடுத்த 30 வருடங்களில் இந்த கல்விக் கொள்கைகளால் மாற்றங்கள் உருவாகுமா என்ற கேள்வியின் அடிப்படையில் தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.

வசதி படைத்தவர்களுக்கான மொழி ஆங்கிலம்! இதை எப்படி பார்க்கின்றீர்கள் ? இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வைப்பது சவாலாக இருக்கும் என்று நினைக்கின்றீர்களா ?

இந்தியாவின் பன்மொழித் தன்மையை நாம் கேள்விக்குள்ளாக்கிவிட இயலாது. அதே போன்று தான் ஆங்கிலத்தினையும். ஒரு காலத்தில் அது சர்வதேச மொழியாக கொண்டாடப்பட்டது. இன்றோ அது ஒரு இணைப்பு மொழியாக கூட இங்கு இல்லை. ஆனால் நிச்சயமாக தொடர்புமொழியாக அது இருக்கின்றது.

ஆங்கில மொழித் தொடர்பினை நாம் பரவலாக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அதற்கு நாம் கூடுதல் உழைப்பினை தர வேண்டும். வெறும் 15 முதல் 16% மக்களே ஆங்கிலத்தின் மூலம் அதிக பயனடைகின்றார்கள். அம்மொழியில் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும். நல்ல புத்தகங்களை வழங்க வேண்டும். உள்புற திறமைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். இதன் மூலம் நிச்சயமாக ஆங்கில பரவலாக்கம் வசப்படும்.

பல்வேறு மொழிகளை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. இருந்தும் அந்த மொழிகளில் (ஏதேனும் ஒன்றில்) தங்களின் கருத்துகளை வெளிப்படுத்த தயங்குகின்றார்கள் என்று எப்போதாவது உணர்ந்ததுண்டா?

ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது மிகவும் ஆழமான முறையில் அமைந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்வில் நான் உணர்ந்தது. நான் கேரளாவில் பிறந்திருந்தாலும், எங்களின் வீட்டுக்குள் தமிழ் தான் பேசுவோம். அதில் மலையாளத்தின் வாசம் வீசும். டி.என். சேஷன் கூறுவார், கேரளாவில் தமிழ் மக்கள் பேசுவது தலையாளம் (தமிழும் மலையாளமும் கலந்த மொழி). பின்பு நான் மும்பை சென்ற போது மராத்தி கற்றுக் கொண்டேன். என் அப்பா என்னிடம் 'சமஸ்கிருதம் கற்றுக்கொள்’ என்றார்.

அப்போது அதன் பலன் தெரியவில்லை. நான் இப்போது எங்கு சென்று உரை நிகழ்த்தினாலும் சுபாஷிதனியில் இருந்து பொன்மொழிகளை எடுத்துக் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். 4 மொழியை கற்றுக் கொண்டதில் நிறைய அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. 8 வருடங்களில் மூன்று மொழியை கற்றால் உங்களின் மூளை எந்த அளவிற்கு அந்த மொழியில் சிறப்பாக விளங்கும் என்பதை உணர்ந்ததால் தான் மும்மொழி கொள்கை மிக முக்கியமானது என்று நாங்கள் முடிவெடுத்தோம்.

மும்மொழிக் கொள்கைக்கு எதிரான இன்றைய சர்ச்சைகள் தேவையற்றது என்று கூற வருகின்றீர்களா ?

மும்மொழிக் கொள்கை தொடர்பாக நாங்கள் கொடுக்கப்பட்ட பத்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான் அதை நாங்கள் நீக்கிவிட்டு புதிய பத்தியை உருவாக்கினோம். ஆனால் அந்த இரண்டு பத்தியின் சாராம்சமும் ஒன்று தான்.

இந்த கட்டுரையின் முழுமையான ஆங்கிலக் கட்டுரையை படிக்க வேண்டுமா?

இந்தியாவின் கலை, பாரம்பரியம், மற்றும் இசை போன்றவைகள் குறித்து புதிய கல்விக் கொள்கைகளில் இடம் பெற்றிருப்பது இந்த திட்டம் பின்னடைவு கொண்டிருப்பதாக உணர்கின்றீர்களா?

இந்திய பொருளாதாரம் நன்றாக வளர்ந்து வருகிறது. நம்முடைய அடையாளம் என்ன? நம்முடைய பின்புலம் என்ன என்பதைப் பற்றி நாம் யோசித்து செயல்பட வேண்டிய தருணம் இது. இன்றைய காலக்கட்டத்தில் நம் இளைஞர்களிடம் இருக்கும் நம் பாரம்பரியம், கலாச்சாரம், கட்டிடக்கலை, இசை போன்ற துறைகளில் இருக்கும் ஆர்வத்தையே எடுத்துக் கொள்வோம்... எடுத்துக்காட்டிற்காக, சமஸ்கிருதம் எடுத்துக்கொள்வோம், லத்தின் மற்றும் கிரேக்க மொழிகளுக்கெல்லாம் அவை முன்னோடி. எத்தனை இளைஞர்கள் இதனை இந்த மாற்றுக் கோணத்தில் யோசிப்பார்கள்?

இது போன்ற காரணங்களால் நம் புதிய கல்விக் கொள்கை பின்னடைவு அடைந்துவிட்டதா என்று கேட்டீர்கள் என்றால் இல்லை என்று தான் சொல்வேன், இதே கல்விக் கொள்கையில் தான் இணையம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு விசயங்களையும் இணைத்திருக்கின்றோம். வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்களுக்கு செரிவான அறிவினை வழங்குவதற்காக நாம் இந்த திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இதில் பின்னடைவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment