கபீல் கான் மீதான தேசிய பாதுகாப்பு வழக்கு ரத்து : அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி

மருத்துவர் கபீல் கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ்  கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் கபீல் கானை  உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக கபில் கான் ஜனவரி 29 முதல் உத்தரபிரதேச மாநிலம் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

சட்டவிரோதமாக தன் மகனை உத்திர பிரேதேச மாநில அரசு சிறை பிடித்து வைத்திருப்பதாக, கபில் கானின் தாயார் நுஜாத் பர்வீன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அலகாபாத் உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர்,  நீதிபதி சவுமித்ரா தயால் சிங் அடங்கிய  அமர்வு  விசாரித்தது.

நுஜாத் பர்வீன் தனது மனுவில், “பிப்ரவரி மாதம்  தனது மகனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், விடுதலையாவதற்கு முன், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஜாமீன் வழங்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் அவர் விடுவிக்கப்படவில்லை. எனவே அவர் சட்டவிரோதமானது  அடைத்து வைக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார் கூறினார்.

 

 

மருத்துவர் கபீல் கானின் பேச்சு வெறுப்பு மற்றும் வன்முறையை ஊக்குவிக்க வில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தேசிய ஒருமைப்பாட்டையும், குடிமக்களிடையே ஒத்துழைப்பையும்  வேண்டினார்  என்றும் தெரிவித்தனர்.  மேலும்,  மருத்துவர் கபீல் கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் கபில் கான் வன்முறையைத்  தூண்டும் விதமாக பேசினார் என்று மாநில அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்தது.  ஆகஸ்ட் நடுப்பகுதியில், உ.பி. அரசாங்கம் கானின் காவலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kafeel khan cleared of nsa charges allahabad high court order to release him immediately

Next Story
இளம் பல்கலைக்கழக வேந்தர்… அம்பேத்கர் விருது பெற்று சாதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express