திமுக தலைவருக்கு வெண்கலச்சிலை.. இறுதி ஊர்வலம் தொடங்கும் முன்பே அறிவித்த முதலமைச்சர்!

காரைக்காலில் அமைய உள்ள புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்

மறைந்த திமுக தலைவர்  கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை அமைக்கப்படும் என்று  முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

வெண்கலச் சிலை:

திமுக தலைவர்  கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக  நேற்று முன் தினம் சென்னையில் காலமானர்.  அவரின் இழப்பு திமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல அவரின் குடும்பத்தாருக்கும் மாபெரும் இழப்பாக  அமைந்து விட்டது.

லட்சத்திற்கும் மேற்பட்ட  பொதுமக்கள்  கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.  மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் அவரது பூத உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் அருகில் புதைக்கப்பட்டது.

கருணாநிதியின்  நீண்ட நாள் ஆசையே அவரின் அன்பு அண்ணாவான  அறிஞர் அண்ணாவின் சமாதியில் தான் தனது உடலும் வைக்கப்படும்  வேண்டும்  என்று கூறியிருந்தார்.  ஆனால் அதையும் இறுதியில் போராடி தான்  வென்றார் கருணாநிதி.

இந்நிலையில்  கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி க புதுச்சேரியில் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்  என்று தெரிவித்தார். மேலும் கருணாநிதிக்கு புதுச்சேரியில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெண்கலச் சிலை

முதல்வர் நாராயணசாமி

இந்த அறிவிப்பை  கருணாநிதி  இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பே முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதே போல் காரைக்காலில் அமைய உள்ள புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close