Advertisment

தடுப்பூசி பற்றாக்குறை : மோடியை தொடர்பு கொண்ட கமலா ஹாரீஸ்

இந்த நடவடிக்கை புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உள்ளிட்ட தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை வழங்குவதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Kamala Harris, Narendra Modi, vaccine

 Shubhajit Roy

Advertisment

Kamala Harris calls PM Narendra Modi on US vaccines for India : வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவிக்க, துணை அதிபர் கமலா ஹாரீஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து பேசியுள்ளார். அதில் அமெரிக்காவின் உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டத்தில் இந்ந்தியாவிற்கும் தடுப்பூசிகளை வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.

கோவாக்ஸ் வழியே முதலில் இந்தியாவுக்கு 2 முதல் 3 மில்லியன் டோஸ்களை வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது இந்தியாவுக்கு ஒரு நாள் டோஸ் - வியாழக்கிழமை, நாடு 2.62 மில்லியன் டோஸை நிர்வகித்தது என்று ஒரு தற்காலிக அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. இவர்களில் 24,04,166 முதல் டோஸ் பயனாளிகள் மற்றும் 220,805 இரண்டாவது டோஸ் பயனாளிகள் ஆவார்கள்.

கூடுதலாக 80 மில்லியன் தடுப்பூசிகளை வைத்திருக்கும் அமெரிக்கா உலக நாடுகளுக்கு ஜூன் இறுதிக்குள் அந்த தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 25 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை வழங்க உள்ளது என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

75% தடுப்பூசிகள் கோவாக்ஸ் மூலமாக வழங்கப்படும். அதில் 6 மில்லியன் டோஸ்கள் லத்தீன் அமெரிக்காவிற்கும், கரீபியன் தீவுகளுக்கும், 7 மில்லியன் டோஸ்கள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும், 5 மில்லியன் தடுப்பூசிகள் ஆப்பிரிக்காவிற்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 6 மில்லியன் டோஸ்கள், தற்போது அதிக கொரோனா தொற்றை சந்தித்து வரும் நாடுகளுக்கும், கூட்டுறவு நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் வழங்கப்படும். இந்த பட்டியலில் கனடா, மெக்ஸிகோ, இந்தியா மற்றும் கொரியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

முதலில் வழங்கப்படும் 25 மில்லியன் டோஸ்களில் ஃபைசர், மாடர்னா மற்றும் ஜே & ஜே தடுப்பூசிகளும் அடங்கும் என வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெஃப்ரி துன்ஸ்டோன் ஜியெண்ட்ஸ் கூறியுள்ளார்.

உதவிகளை பெறவோ, சலுகைகளை பெறவோ இந்த தடுப்பூசிகளை பகிரவில்லை மாறாக மக்களை காப்பாற்றவும், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வரவும் இதனை பயன்படுத்துகிறோம் என்றும், உலக அளவில் தொற்று நோயில் அதிக பாதிப்பை சந்தித்து வரும் நாடுகளுக்கும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்கும் முதற்கட்டமாக 25 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை வழங்குகிறோம் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

உலகளாவிய தடுப்பூசி பகிர்வுக்கான அமெரிக்க வியூகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான உறுதிமொழியை நான் மிகவும் பாராட்டுகிறேன். அமெரிக்க அரசு, வணிகங்கள் மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோரின் அனைத்து ஆதரவிற்கும் ஒற்றுமைக்கும் நான் நன்றி தெரிவித்தேன் என்று கமலா ஹாரீஸுடன் பேசிய பிறகு மோடி கூறினார். இந்தியா-அமெரிக்க தடுப்பூசி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும், “கோவிட்-க்குப் பிந்தைய உலகளாவிய சுகாதாரம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு பங்களிப்பு செய்வதற்கான சாத்தியங்கள் குறித்தும் அவர் பேசினார் என்றார் மோடி.

அஸ்ட்ரெஜெனகாவின் உற்பத்திக்காக அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நீக்குவதாக அமெரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று ஜெய்ண்ட்ஸ் கூறியுள்ளார்.

நோவாவாக்ஸ், சனோஃபை தடுப்பூசிகளுக்கும் டி.பி.ஏவின் முன்னுரிமை ரேட்டிங்குகள் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் இந்த மூன்று தடுப்பூசிகளைத் தொடர்ந்து தயாரிப்பார்கள், இந்த நடவடிக்கை இந்த தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் இந்த நிறுவனங்கள் முதலில் எந்த உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உள்ளிட்ட தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை வழங்குவதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Coronavirus America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment