Advertisment

ஜெய்ஸ்ரீராம் சொல்ல தயக்கம் ஏன்? மாணவியின் கேள்விக்கு கன்னையா குமாரின் பதில்

மங்களூருவில் கூட்டம் ஒன்றில் ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமாரிடம் மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanhaiya kumar, kanhaiya kumar mangalore speech, kanhaiya kumar one india unity speech, கன்னையா குமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர், youth at crossroads kanhaiya speech, viral news, indian express

kanhaiya kumar, kanhaiya kumar mangalore speech, kanhaiya kumar one india unity speech, கன்னையா குமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர், youth at crossroads kanhaiya speech, viral news, indian express

Kanhaiya Kumar’s viral video: மங்களூருவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமாரிடம் மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் காக்கிலயாவின் நூற்றாண்டு விழா மங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம் மாணவி ஒருவர், “மிஸ்டர் கன்னயா, இது ஒரே நாடு; இங்கு எல்லாமே ஒன்றுதான் என்கிற சிந்தனை உங்களுக்கு ஏன் வரவில்லை? நமக்கு ஒரே அப்பா, ஒரே அம்மாதானே. பாரத் மாதா கி ஜே சொல்றதுல உங்களுக்கு என்ன தயக்கம்? ஜெய் ஸ்ரீராம் சொல்ல ஏன் தயக்கம்? என்று கேள்வி எழுப்பி அனைவரையும் திகைக்க வைத்தார்.

ஆனால், அந்த மாணவியின் கேள்விகளால் சிறிதும் அசராத கன்னையா குமார், “ஒரே நாடு, ஒரே இனம் என்று என்னென்னவோ சொல்லி, அதை நான் ஏன் ஆதரிக்கவில்லை என கேட்கிறீர்கள். எல்லாமே நீங்கள் சொல்வதுபோல் ஒரே நம்பரில் முடிந்து விடுவது இல்லை.” என்று கூறினார்.

தொடர்ந்து அந்த மாணவியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “இந்தியா ஒரே தேசம், ஒரே நாடுதானே என்று கேட்கிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்தியா ஒரே நாடுதான். இந்த நாட்டை வழிப்படுத்தும் அரசியல் சாசனமும் ஒன்றுதான். மறுக்கவில்லை. ஆனால், அந்த அரசமைப்பு சட்டத்தில் முந்நூறுக்கு மேற்பட்ட விதிகள் இருக்கின்றன.நாட்டை நிர்வகிக்கும் நாடாளுமன்றம் ஒன்றுதான். ஆனால், அதில் லோக் சபா, ராஜ்ய சபா என்று இரண்டு அமைப்புகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்துக்கு இந்த நாட்டு மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஒரே ஒரு நபர் அல்ல; 545 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த சபைக்கு செல்கிறார்கள். ஒன்று ஒன்று என நீங்கள் சொல்வதை நமது ஒன்னெஸ் - ஒருமைப்பாடு என்றுதான் பார்க்கிறேன். அது உண்மையில் நமது பன்மைத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. யூனிட்டி இன் டைவர்சிடி என்று அதைத்தான் சொல்கிறோம்” என்று கூறி அனைவரின் கைத்தட்டலையும் பாராட்டுதல்களையும் பெற்றார்.

மேலும், அவர் ஜெய்ஸ்ரீராம் சொல்ல ஏன் தயக்கம் என்ற மாணவியின் கேள்விக்கு பதில் அளிக்கையில், “ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்கிறீர்கள். ராமர் தனி ஆளா? சீதையுடந்தானே இருக்கிறார்? ஜெய் சீதா ராம் என்று சொல்லுமாறு கேட்க உங்களுக்கு ஏன் தோன்றவில்லை?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.

கன்னையா குமார் பிறந்த மிதிலையில் ஆக்ரஹன் மாதத்தில் நடைபெறும் ராமன் சீதை திருமணம் பற்றியும் அப்போது அப்பகுதி மக்கள் மரபுப்படி ராமனை திட்டும் வழக்கத்தையும் கூறினார். அதோடு, இந்தியா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் இருப்பதாகவும் அதில் வேறுபட்ட கதைகள் இருப்பதாகவும் கூறினார்.

“நீங்கள் உங்கள் தாய் மீது மிகவும் பாசம் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது இயல்பானது. நீங்கள் சென்று கொண்டிருக்கும்போது ஜெய்ஸ்ரீராம் என்று கோசமிடுபவர்களோ அல்லது இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோஷமிடுபவர்களோ ஒரு கொடியுடன் வந்து நீங்கள் உங்கள் தாயை நேசிக்கிறீர்கள் என்றால் அதை நிரூபித்துக்காட்டு என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்” என்று கூறி கேள்வி கேட்ட பெண்ணுக்கு அனைவரும் வியக்கும்படி பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கன்னையா குமார் அந்த மாணவிக்கு பதில் அளித்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Cpm Jnu University Student
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment