Advertisment

கர்நாடகா தேர்தல் 2018: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பாஜக, காங்கிரஸ் சரிசம வாய்ப்பு!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கர்நாடகா தேர்தல் 2018: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பாஜக, காங்கிரஸ் சரிசம வாய்ப்பு!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தமாக 70 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisment

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜ.க, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 3 முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை ஆறு மணியுடன் நிறைவு பெற்றது. இன்று பதிவான வாக்குகள் மே 15ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 222 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,622 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன. அதன் Live Updates காண இணைந்திருங்கள் ஐஇதமிழுடன்,

இரவு 07.50 - நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 105 - 109 இடங்களையும், காங்கிரஸ் 71 - 75 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

இரவு 07.10 - கர்நாடகாவில் மொத்தம் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இரவு 07.05Newsx-CNX வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், பாஜக 102-106 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 72 - 75 இடங்களை கைப்பற்றும் என்றும், ஜேடிஎஸ் 35 - 38 இடங்களை கைப்பற்றும் எனவும், 3-6 இடங்கள் மற்றவர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 06. 58 - ஏபிபி (ABP) வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 97 - 109 இடங்களையும், காங்கிரஸ் 87 - 99 இடங்களையும், ஜேடிஎஸ் 21 - 30 இடங்களையும் கைப்பற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலை 06.48 - ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 95 - 114 இடங்களையும், காங்கிரஸ் 32- 43 இடங்களையும், ஜேடிஎஸ் 2-3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 06.44 - சுவர்ணாஸ் கருத்துக் கணிப்பு முடிவில், காங்கிரஸ் 106-118 இடங்களையும், பாஜக 79-92 இடங்களையும், ஜேடிஎஸ் 1-4 இடங்களையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 06.34 - இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 106 - 118 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 79- 92 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 06.30 - டைம்ஸ் நவ் - விஎம்ஆர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், 90 - 103 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் எனவும், பாஜக 80 - 93  இடங்களையும், ஜேடிஎஸ் 2 - 4 இடங்களையும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment