Advertisment

என் சகோதரரின் உடலை விட, மற்ற மாணவர்களை பத்திரமாக மீட்டு வாருங்கள்; உக்ரைனில் உயிரிழந்த நவீனின் சகோதரர் உருக்கம்

என் சகோதரரின் உடலை கொண்டு வருவதை விட, உயிருடன் இருப்பவர்களை பத்திரமாக வெளியேற்றுங்கள் என உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த நவீனின் சகோதரர் உருக்கமாக கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
என் சகோதரரின் உடலை விட, மற்ற மாணவர்களை பத்திரமாக மீட்டு வாருங்கள்; உக்ரைனில் உயிரிழந்த நவீனின் சகோதரர் உருக்கம்

Indian killed in Ukraine: ‘More than my brother’s body, bring back stranded students’: "என் சகோதரர் திரும்பி வரமாட்டார், ஆனால் உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றுங்கள்." உக்ரைனில் நடந்து வரும் போரில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த கர்நாடகத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் நவீனின் மூத்த சகோதரர் ஹர்ஷாவின் வார்த்தைகள் இவை.

Advertisment

புதன்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், அரசாங்கம் தனது சகோதரரின் உடலைக் கொண்டுவருவதை விட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஹர்ஷா கூறினார்.

“பல பெற்றோர்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் கவலையுடன் (தங்கள் குழந்தைகளைப் பற்றி நினைத்து) கடந்து வருகின்றனர். எனது சகோதரனின் உடலை கொண்டு வருவதை விட, உக்ரைனில் உள்ள மற்ற அனைத்து மாணவர்களையும் பத்திரமாக அழைத்து வருமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன்,'' என்று ஹர்ஷா கூறினார்.

கார்கிவில் இருந்து புறப்படும் திட்டத்தைப் பற்றி நவீன் குடும்பத்தினரிடம் கூறியதாகவும், அண்டை நாட்டு எல்லைகளை அடைய அதிக நேரம் தேவைப்படும் என்பதால், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும், அதற்காக உணவு வாங்கச் சென்றபோது இந்த துயரச் சம்பவம் நடந்ததாகவும் ஹர்ஷா கூறினார்.

இதையும் படியுங்கள்: நீட்டில் பெயில் ஆகுறவங்கதான் வெளிநாட்டுக்கு படிக்கப் போறாங்க… மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்டு வருமாறு நவீனின் தந்தை சேகரப்பா கியான்கவுடரும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இதற்கிடையில், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் 90 சதவீத இந்தியர்கள் இந்தியாவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கருத்து குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று சேகரப்பா கியான்கவுடர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Karnataka Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment