Advertisment

போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபடும் பழக்கம் உள்ளவர்களுக்கு தடுப்புக் காவல் - பினராயி விஜயன்

போதைப்பொருள் வழக்குகளின் குற்றப்பத்திரிகையில், இதே போன்ற வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கடந்த கால வழக்குகளைக் குறிப்பிட வேண்டும் என்று சட்டப்பேரவையில் பினராயி விஜயன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Kerala Chief Minister, Pinarayi Vijayan, Habitual drug offenders, preventive detention, Psychotropic Substances Act, indian express, kerala news

கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை அம்மாநில சட்டப்பேரவையில், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடும் பழக்கமாகக் கொண்டவர்களை போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களில் சட்டவிரோத கடத்தல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி கேரளாவில் போதைப்பொருள் குற்றவாளிகள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று கூறினார்.

Advertisment

“இந்தச் சட்டத்தின்படி, போதைப்பொருள் குற்றத்தில் வழக்கமக ஈடுபடுபவர்களை ஜாமீன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்க வழிவகை உள்ளது. இதுவரை, இந்த விதியை நாம் பயன்படுத்தவில்லை. இப்போது, ​​இது தொடர்பாக தேவையான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான பரிந்துரையை சமர்ப்பிக்க காவல்துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பி.சி. விஷ்ணுநாத் முன்வைத்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு பதிலளித்தபோது பினராயி விஜயன் கூறினார்.

கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதாக அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கேரளாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 22 வரை 16,128 போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 இல், 4,650 வழக்குகளும், 2021 இல், 5,334 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020ல் 5,674 ஆக இருந்த கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 17,834 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இவ்வருடம் 1,340 கிலோ கஞ்சா, 6.7 கிலோ எம்.டி.எம்.ஏ, 23.4 கிலோ ஹஷிஷ் ஆயில் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் முறையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். போதைப்பொருள் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த காலங்களில் தண்டனைகளை எதிர்கொண்டிருந்தால், அவர்களின் குற்ற வரலாறு குறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 31 (முந்தைய தண்டனைக்குப் பிறகு குற்றங்களுக்கு மேம்படுத்தப்பட்ட தண்டனை) மற்றும் 31ஏ (மீண்டும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குதல்) ஆகியவற்றின் கீழ் குற்றங்களை எதிர்கொள்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதிப்படுத்த, இதே போன்ற வழக்குகளில் தண்டனைகள் தொடர்பான அவர்களின் குற்ற வரலாறு இணைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி, காவல்துறை மற்றும் கலால் துறையினர் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளிக்கும் வகையில் குற்றவாளிகளிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் பெறலாம் என்று முதல்வர் கூறினார். இந்த விதியை அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவிர, போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் தகவல்களை பராமரிக்கப்பட வேண்டும்.

சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் ஆதரவுடன் போதைப் பழக்கத்திற்கு எதிராக மாநில அரசு பெரிய அளவில் பிரசாரத்தை மேற்கொள்ளும் என்று பினராயி விஜயன் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kerala Pinarayi Vijayan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment