Advertisment

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு : முதல்வருக்கு தொடர்பா? ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

Kerala Foreign Currency Smuggling : கேரளாவில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் கடத்தல் வழக்கில், முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
கேரளா தங்கம் கடத்தல் வழக்கு : முதல்வருக்கு தொடர்பா? ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

கேரளாவில் கடந்த ஆண்டு தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ்  என்ற பெண் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வரை இந்த வழக்கில் நாள்தோறும் புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அதிகாரிகள் உதவியுடன் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோரின் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கேரளா சுங்கவரித்துறை நேற்று (மார்ச் 4 ம் தேதி) கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் மாநிலத்தில், தங்கம் கடத்திர் வழக்கில் ஆளும் கட்சினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

Advertisment

சுங்கச் சட்டத்தின் பிரிவு 108 மற்றும் சிஆர்பிசியின் பிரிவு 164 ஆகியவற்றின் படி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஸ்வப்னாவின் அறிக்கைகள் குறித்த வாக்குமூலத்தில், வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய வழக்கில் சபாநாயகருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் அவரது தனிப்பட்ட ஊழியர்களிடம் சுங்கவரித்துறையினர் விசாரணை நடத்தினர்.இதில்  சபாநாயகர் தானே விசாரணைக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் இந்த தங்க கடத்தல் வழக்கில், முதலமைச்சருக்கு எதிராக சுங்க குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இதுவே முதல் முறையாகும், இருப்பினும் முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரின் பெயர் தங்க கடத்தல் தொடர்புடைய வழக்குகளில் தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுங்க ஆணையாளர் (தடுப்பு) சுமித் குமார் சமர்ப்பித்த அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா முதல்வர், சிவசங்கர் மற்றும் அவர்களின் தனிப்பட்ட பணியாளர் உறுப்பினருடன் தனக்கு நெருங்கி தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டு தூதரகத்தின் உதவியுடன் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு நாணயத்தை கடத்துவது குறித்தும் ஸ்வப்னா சுரேஷ் தெளிவாக கூறியுள்ளார். மேலும் மாநில அமைச்சரவையின் மூன்று அமைச்சர்கள் மற்றும் சபாநாயகரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment