Advertisment

சி.பி.எம்-ன் கோட்டையை தகர்ப்பாரா? காங்கிரஸின் 26 வயது வேட்பாளர் அரிதா

Kerala election news in Tamil, 26 age Aritha can Break Left bastion, Priyanka Gandhi: கடந்த 15 வருடங்களாக இடதுசாரிகளின் கோட்டையாக திகழும் ஆலப்புழா மாவட்டத்தின் கரையோரத் தொகுதியான காயம்குளத்தில் 26 வயதேயான பால் விவசாயி அரிதா பாபுவை காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் களம் இறக்குகிறது. அரிதா, கடந்த 2015ஆம் ஆண்டில் மாவட்ட பஞ்சாயத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய வேட்பாளர். அதனால் அப்பகுதியில் பிரபலமாக அறியப்பட்டவர்.

author-image
WebDesk
New Update
சி.பி.எம்-ன் கோட்டையை தகர்ப்பாரா? காங்கிரஸின் 26 வயது வேட்பாளர் அரிதா

கேரள சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ், சிபிஎம், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த 15 வருடங்களாக இடதுசாரிகளின் கோட்டையாக திகழும் ஆலப்புழா மாவட்டத்தின் கரையோரத் தொகுதியான காயம்குளத்தில் 26 வயதேயான பால் விவசாயி அரிதா பாபுவை காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் களம் இறக்குகிறது. அரிதா, கடந்த 2015ஆம் ஆண்டில் மாவட்ட பஞ்சாயத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய வேட்பாளர். அதனால் அப்பகுதியில் பிரபலமாக அறியப்பட்டவர்.

இந்த சட்டமன்ற தேர்தல் களத்தில் இரண்டாவது இளைய வேட்பாளராக அரிதா உள்ளார். இவரை எதிர்த்து தற்போதைய சி.பி.எம் எம்.எல்.ஏ பிரதீபா மற்றும் பாரத் தர்ம ஜன சேனா வேட்பாளர் பிரதீப் லால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாரத் தர்ம ஜன சேனா, பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது. பிஜேடிஎஸ் கட்சி ஓபிசியிலுள்ள ஈசாவா சமூக ஆதரவை பெற்றுள்ளது.

காங்கிரஸின் அரிதாவும் ஈசாவா சமூகத்தைச் சேர்ந்தவர் தான். அவர் கால்நடை பண்ணை வேலைகளில் ஈடுபடுகிறார். அவரது தந்தை உடல் நலம் சரியில்லாமல் போனதால் அரிதா அந்த வேலையை செய்து வருகிறார்.

அரிதா பாபு தனது வேட்பு மனுவில் ரூ.1.89 லட்சம் மற்றும் ரூ.32,000 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவருக்கு தேர்தலுக்கான டெபாசிட் தொகையை பிரபல மலையாள நடிகரும், காங்கிரஸ் ஆதரவாளருமான சலீம் குமார் கட்டியுள்ளார்.

மேலும் அரிதா,  எனது தந்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் வார்டு மற்றும் பூத் கமிட்டி அளவில் பணியாற்றியவர். அவர் தான் என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்தவர் என்று கூறினார்.

”நான் காயம்குளத்தைச் சேர்ந்தவன் என்பதே எனது மிகப்பெரிய அடையாளம். அதனால் இங்குள்ள பிரச்சனைகளை நான் புரிந்துக்கொள்கிறேன்” என்று அரிதா கூறுகிறார்.

கடந்த செவ்வாய்கிழமை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அரிதாவுக்காக பிரச்சாரம் செய்தார். பின்னர் கொல்லமில் நடைபெற்ற பேரணியில் பேசியபோது, தங்க கடத்தல் ஊழல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தத்தை சர்ச்சைக்குரிய அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியது ஆளும் கட்சியின் பாசிசம் என்று குற்றம் சாட்டினார். மேலும், அதற்கு எதிராக நீங்கள் குரல் எழுப்பும்போது அதை அரசு அடக்க முயற்சிக்கிறது என்றும், அரசாங்கத்தின் மோசடிகளை நீங்கள் கேள்வி கேட்கும்போது முதலமைசசர் எனக்கு தெரியாது என்று பதிலளிக்கிறார். அவர் பலமான முதல்வரா? அல்லது பலவீனமான முதல்வரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

காயம்குளம் கடந்த காலங்களில் எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் என மாறிமாறி சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்திருந்தாலும் 2006ஆம் ஆண்டு முதல் சிபிஎம்-ன் கோட்டையாக இருந்து வருகிறது. இச்சட்டமன்ற தொகுதியில் காயம்குளம் நகராட்சி மற்றும் ஆறு பஞ்சாயத்துகள் உள்ளன. 2020ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் எல்.டி.எஃப் நகராட்சியையும் நான்கு பஞ்சாயத்துகளையும் வென்றது.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Assembly Elections 2021 Priyanka Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment