Advertisment

சபரிமலை வந்து செல்லும் வகையில் "ஏர் போர்ட்" ! இடத்தை தேர்வு செய்தது கேரள அரசு

பம்பையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த விமானம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
sabarimala

சபரிமலைக்கு வந்து செல்லும் பக்கதர்களுக்காக, ஏர்போர்ட் அமைக்க கேரள அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கேரளாவில் உள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் மிகப் பிரபலமானது. இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, வழிபட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில், தற்போது, சபரிமலை வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக, அங்கு விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம், கஞ்சிரப்பள்ளி தாலுகாவில் விமான நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த விமானம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக 4 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு அமைத்திருந்தது. அந்த குழு அளித்துள்ள பரிந்துரையின்படி தற்போது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கஞ்சிரப்பள்ளி தாலுகாவில் உள்ள ஹாரிசோன் மலையாளம் லிமிடெட்-ன் சேருவள்ளி எஸ்டேட்டில் தான் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 2,263 ஏக்கர் பரப்பளவிளான இடம் உள்ளது.

எனினும், இந்த இடத்தை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் உள்ளன. எனவே, கேரள அரசு எந்தவித நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Kerala Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment