Advertisment

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... மாதம் முழுவதும் 144 தடை உத்தரவு!

கொரோனா தொற்று அதிகம் பாதிப்பட்ட இடங்களுக்கு முழுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala government imposes section 144 of crpc till october 31 to contain covid19 spread,

கொரோனா வைரஸ் இந்தியாவில் முதன் முறையாக கேரள மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருந்தது அம்மாநில அரசு.  மத்திய அரசின் சில தளர்வுகளுக்கு பிறகு அங்கு மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகம் பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை அங்கு ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அக்டோபர் 16ம் தேதி முதல் மத்திய பட்ஜெட்டுக்கான பணிகள் துவக்கம்!

சந்தைகள், வணிக நோக்கம் மற்றும் அலுவலகங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூட்டமாக நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தில் 2,13,000 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 9,258 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மக்கள் வெளியிடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பட்ட இடங்களுக்கு முழுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Kerala Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment