ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தாகக் கூறப்படும், அபுதாபியில் இருந்து காணாமல் போன கேரளாவைச் சேர்ந்த 48 வயது நபர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சுல்பிகரின் உடல் அட்டாரி எல்லையில் ஒப்படைக்கப்படும் என பாகிஸ்தான் அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலக்காடு மாவட்டம் கப்பூரைச் சேர்ந்த சுல்பிகர் காணாமல் போனதில் மர்மம் இருந்தது,
அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக அபுதாபியை விட்டு வெளியேறியதாக உளவுத்துறை அதிகாரிகள் நம்பினர். சுல்பிகர் 2018 இல் கேரளாவை விட்டு வெளியேறினார்.
அவர் அபுதாபியில் இருந்து காணாமல் போனது உளவுத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. அவர் ஈரானுக்குச் சென்று பின்னர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலும் விவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன, என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரது உடல் அட்டாரி எல்லையில் ஒப்படைக்கப்படும் என்று பாகிஸ்தான் ஏஜென்சிகள் அமிர்தசரஸில் உள்ள FRO மூலம் இந்திய அரசுக்குத் தெரிவித்தனர்.
சுல்பிகர் இஸ்லாமிய தேசத்தில் சேர்ந்து விட்டதாகக் கூறப்படுவதால், பாலக்காடு கொண்டு வரப்படும் உடலைப் பெற அவரது குடும்பத்தினர் ஆர்வம் காட்டவில்லை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“