Advertisment

Kerala lottery result today: கேரளா பவுர்ணமி லாட்டரி ரூ.70 லட்சம் வென்ற அதிர்ஷ்டசாலி யார்?

kerala lottery today: லாட்டரி குலுக்கலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் http://www.keralalotteries.com/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pournami lottery result today, கேரளா லாட்டரி ரிசல்ட் லைவ், kerala lottery result today pournami

pournami lottery result today, கேரளா லாட்டரி ரிசல்ட் லைவ், kerala lottery result today pournami

Kerala pournami lottery result today: தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பலமாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை இல்லாதததால், அங்கு லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் அரசே, லாட்டரி டிக்கெட்களை விற்பனை செய்வதால், மக்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்கும் கருவியாக லாட்டரி டிக்கெட்டை பாவிக்கின்றனர்.

Advertisment

Kerala Lottery Result Today: கேரளா லாட்டரி RN-397 ரிசல்ட்: ரூ 70 லட்சம் யாருக்கு?

விஷூ பண்டிகையையொட்டி, கேரள அரசு வெளியிட்ட சிறப்பு லாட்டரி டிக்கெட்டில், தமிழர் ஒருவருக்கு முதல் பரிசான ரூ.5 கோடி பரிசுத்தொகை கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (ஜூன் 23ம் தேதி) மாலை கேரளா பவுர்ணமி லாட்டரி ஆர்என்-397 முடிவுகள் வெளியானது.

கேரளா பவுர்ணமி லாட்டரி ஆர்என் 397ன் முதல் பரிசாக ரூ.70 லட்சம் வழங்குகிறது. இரண்டாவது பரிசாக ரூ 5 லட்சமும் மற்றும் மூன்றாவது பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்குகிறது. இதுமட்டுல்லாது ஆறுதல் பரிசாக ரூ. 8 ஆயிரம் 11 பேருக்கு வழங்கப்படுகிறது. ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ. 40. லாட்டரி புக்லெட்டின் விலை ரூ.750.

kerala lottery result today pournami: கேரளா லாட்டரி ரிசல்ட் இன்று

லாட்டரி குலுக்கலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் http://www.keralalotteries.com/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் பரிசான ரூ.70 லட்சம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ளது.

பரிசுத்தொகை ரு. 5 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், வெற்றியாளர்கள், கேரள மாநிலத்தில் உள்ள எந்தவொரு லாட்டரி கடைக்கும் சென்று பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். பரிசுத்தொகை ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் என்றால், வங்கி அல்லது அரசு லாட்டரி அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் லாட்டரி டிக்கெட்டை சமர்ப்பித்து பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

தினசரி லாட்டரி, பம்பர் குலுக்கல் என கேரளாவில் லாட்டரி டிக்கெட் வர்த்தகம், அதிகம் பணம் புழங்கும் தொழிலாக நடைபெற்று வருகிறது.ஓணம், கிறிஸ்துமஸ், விஷூ, தசரா உள்ளிட்ட பண்டிகைகளின் போது சிறப்பு லாட்டரி விற்பனையும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Kerala Kerala Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment