மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த கேரளாவிற்கு 100 கோடி நிதி உதவி - ராஜ்நாத் சிங்

186 நபர்களை பலி வாங்கிய தென்மேற்கு பருவமழை - ஆகஸ்ட் 9 முதல் 12 வரை மட்டும் 37 பேர் உயிரிழப்பு

ராஜ்நாத் சிங் கேரளா வருகை : கேரளாவில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக பார்வையிட்டனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் இருந்து பார்வையிட்டார்.

இடுக்கி, எர்ணாக்குளம், மற்றும் வயநாடு பகுதிகளில் பலத்த சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. மொத்த இழப்பீட்டுத் தொகையாக கேரள மாநிலம் ரூபாய் 8,316 கோடி கேட்டிருந்த நிலையில் ராஜ்நாத் சிங் 100 கோடி ரூபாயை ஆரம்பகட்ட நிதி உதவியாக அளித்திருக்கிறார்.

100 கோடி நிவாரண நிதி அறிவித்த ராஜ்நாத் சிங்

இது குறித்து உள்துறை அமைச்சர் கூறும் போது “மத்திய அரசு கேரளாவில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பாதிப்பை பார்வையிட்டுக் கொண்டு தான் இருக்கிறது. எங்களால் இயன்ற அளவு உதவிகளை மிக விரைவாக கேரள அரசிற்கும் மக்களுக்கும் அளிப்போம்” என்றார்.

மத்திய அரசு ஏற்கனவே நிவாரண நிதியாக 169.50 கோடி ரூபாய் அறிவித்திருந்தது இல்லாமல் இது தனியாக அவசர கால ரீதியில் விரைவில் அளிக்கப்பட்ட நிதி உதவியாகும்.

ஆகஸ்ட் 9 முதல் 12 வரை மட்டும் 37 பேர் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதுவரை தென்மேற்கு பருவமழைக்கு சுமார் 186 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் முழுவதும் சுமார் 302 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் சுமார் 31,075 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணை நிலவரம் பற்றி அறிந்து கொள்ள

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close