கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த நிதி முறைகேடு மற்றும் ஜூனியர் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூறுகையில், ஆகஸ்ட் 9 அன்று நடந்த ஜூனியர் டாக்டர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தின் போது கல்லூரி முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் "தவறான லாபத்திற்காக" "மற்ற சக குற்றவாளிகளுடன்" "குற்றவியல் தொடர்பை" கொண்டிருந்தாக கூறியது.
கோஷ் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்ட காலத்திலிருந்தே அவருக்குத் தெரிந்த இரண்டு விற்பனையாளர்கள், அவர் கொல்கத்தாவுக்குச் சென்ற பிறகு மருத்துவமனை ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம் பயனடைந்ததாகவும் அது கூறியது.
கோஷ் உதவியாளரின் மனைவிக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (ஆர்.ஜி.கே.எம்.சி.எச்) கஃபே ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோஷ் மற்றும் பிப்லப் சிங்ஹா, சுமன் ஹஸ்ரா மற்றும் அஃப்சர் அலி ஆகிய மூவருடன் செப்டம்பர் 3 அன்று அலிப்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இந்த சமர்ப்பிப்புகளைச் செய்தது. நான்கு பேரும் சிபிஐ காவலில் உள்ளனர்.
கோஷ் 2016 முதல் 2018 வரை முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்தார். 2018 ஆம் ஆண்டின் இறுதியில், அவர் கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பிப்ரவரி 2021 வரை அவர் ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குப் பொறுப்பேற்ற வரை அங்கேயே இருந்தார்.
செப்டம்பர் 2023-ல், அவர் மீண்டும் முர்ஷிதாபாத் கல்வி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார். அவர் ஒரு மாதத்திற்குள் ஆர்.ஜி கர் வளாகத்திற்குத் திரும்பினார் மற்றும் ஆகஸ்ட் 9 சம்பவம் வரை அங்கேயே தொடர்ந்தார். அவர் ஆகஸ்ட் 12 அன்று ராஜினாமா செய்தார், உடனடியாக கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மறுநாள், கொல்கத்தா உயர்நீதிமன்றம் தலையிட்டு, அவரை விடுப்பில் செல்லச் செய்தது. சிபிஐயால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிபிஐயின் கூற்றுப்படி, சிங்ஹா மற்றும் ஹஸ்ரா சந்தீப் கோஷ் இருவரும் முதல்வர் கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (CNMCH) மாற்றப்பட்டபோதும் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
"ஆர்.ஜி கர் மருத்துவமனைக்கு கோஷ் மாற்றப்பட்ட பிறகு கோஷ் இந்த இரு விற்பனையாளர்களையும் அந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார், அங்கு அவர்கள் கடை அமைத்தனர். அவர்கள் அனைவரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது, இது எப்ஐஆரில் உள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது” என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
"சுமன் ஹஸ்ராவால் இயக்கப்படும் M/s ஹஸ்ரா மெடிக்கல், டாக்டர் சந்தீப் கோஷின் ஆதரவைக் கொண்டிருந்தது என்பதை அந்த விசாரணையின் முதல் கட்டத்தில் வெளி வந்தது. மா தாரா டிரேடர்ஸ் போன்ற அதே நிலைப்பாட்டில், M/s ஹஸ்ரா மெடிக்கலுக்கும் RG Kar மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலிருந்து பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்தது.
ஆங்கிலத்தில் படிக்க: CBI to court on ex-principal of R G Kar College: ‘Sandip Ghosh had criminal nexus, favoured vendors, security aide’s wife for contracts’
"சோபா செட், குளிர்சாதனப் பெட்டி போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்குவதில் தொடர்பில்லாத பல பொருட்கள் ஹஸ்ரா மெடிக்கலுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டாக்டர் சந்தீப் கோஷ் உடன் இணைந்த பிறகு, சுமன் ஹஸ்ராவின் நிறுவனத்தின் வர்த்தகம் 2021 முதல் 2022 வரை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்பதும் விசாரணையில் வெளிப்படுத்தியுள்ளது.
சிபிஐ, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், கோஷ் தனது பாதுகாப்பு உதவியாளர் அஃப்சர் அலிக்கு எப்படி உதவினார் என்பதையும் விவரித்துள்ளது. “டாக்டர். சந்தீப் கோஷ் வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டலின் ஒப்பந்தத்தை தனது நெருங்கிய உதவியாளர் அஃப்சர் அலிகானுக்கு வழங்கி உள்ளார்.
இந்த ஒப்பந்தம் RGKMCH மற்றும் M/s Eshan Cafe இடையே கையெழுத்தானது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் நர்கிஸ் கான், அஃப்சர் அலி கானின் மனைவி ஆவார். இருப்பினும், இந்த கஃபேயின் அனைத்து விவகாரங்களையும் அஃப்சர் அலி கான் நிர்வகிக்கிறார்.
மொத்தம் 4 ஏலதாரர்களில் டெண்டரில் பங்கேற்க தொழில்நுட்ப அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒரே தகுதியான நிறுவனம் என்பதால், M/s Eshan Cafe க்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட முறையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, ”என்று சி.பி.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.