Advertisment

எல்லை விவகாரம் : முக்கிய ரோந்து பகுதியில் துருப்புகளை விலக்கிக் கொள்ள இந்தியா - சீனா ஒப்புதல்

கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள பி.பி.14 என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இந்த பி.பி.17ஏவிலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால்வான் பள்ளதாக்கு மற்றும் பாங்கோங் சோவில், படைகளை திரும்பப் பெற கால இடைவெளி வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Ladakh standoff India, China

Ladakh standoff India, China agree to disengage from a key patrol point : 6 மாதங்கள் வரை நீடித்திருந்த எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் உள்ள முக்கிய ரோந்துப் புள்ளியில் இருந்து இரண்டு நாட்டு ராணுவ துருப்புகளும் தங்களின் படையை நீக்கிக் கொள்ள முன்வந்துள்ளது. இருப்பினும் மற்ற முக்கிய பகுதிகளில் தற்போது இருக்கும் நிலைமை தொடர்ந்து நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

ரோந்துப் பகுதி PP17A மீதான ஒப்புதல், சனிக்கிழமை நடைபெற்ற இரண்டு நாட்டு கார்ப்ஸ் கமாண்டர்கள் மட்ட 12வது சுற்று பேச்சுவார்த்தையில் உறுதியானது. இந்தியாவின் சூசுல் மால்டோ எல்லையில், லடாக் பகுதியில் 15 மாதங்களாக நிலவும் மோதலைத் தீர்ப்பதற்கான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கோக்ரா போஸ்ட் என்று அழைக்கப்படும் PP17A-லிருந்து பின்வாங்க சீனா ஒப்புக்கொண்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன, ஆனால் PP15 அல்லது ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து பின்வாங்க விரும்பவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பி.பி.17ஏ.வில் இருந்து விலக சீனா ஒப்புக் கொண்டது. ஆனால் பி.பி.15-ல் சீன வீரர்கள், உண்மையான எல்லைக் கோட்டில் தான் நிறுத்தப்பட்டனர் என்பதால் அவர்களை விலக்கிக் கொள்ள முடியாது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

முன்மொழிவுகள் அரசிடம் உள்ளது. துருப்புகள் எவ்வாறு முக்கிய பகுதிகளில் இருந்து திரும்பப் பெறப்படுவார்கள் என்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் துருப்புகள் விலகி செல்வார்கள் என்று வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

தெம்சாக் பகுதியில் உள்ள பெத்சாங் சமவெளி மற்றும் சார்திங் - நிங்குலாங் நல்லா இடங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசவில்லை. ஆனால் பிப்ரவரியில் இருந்த தேக்கநிலை தற்போது இல்லை என்று சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் மேற்கு கட்டுப்பாட்டு கோட்டத்தின் உண்மையான கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து விலகுவதாக தொடர்பாக நேர்மையான மற்றும் ஆழமான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது என்று இரண்டு நாடுகளும் சேர்ந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானது என்று இரு தரப்பினரும் குறிப்பிட்டனர், இது பரஸ்பர புரிதலை மேலும் மேம்படுத்தியது. தற்போதுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப மீதமுள்ள இந்த சிக்கல்களை விரைவாக தீர்க்கவும், பேச்சுவார்த்தை மற்றும் பேச்சுவார்த்தைகளின் வேகத்தை பராமரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அந்த கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இடைப்பட்ட காலத்தில் மேற்குப் பகுதியில், உண்மையான எல்லைப் பகுதியில் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், கூட்டாக அமைதியை பராமரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இருதரப்பினரும் ஒப்புக் கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள பி.பி.14 என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இந்த பி.பி.17ஏவிலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால்வான் பள்ளதாக்கு மற்றும் பாங்கோங் சோவில், படைகளை திரும்பப் பெற கால இடைவெளி வழங்கப்பட்டது. தற்காலிக கட்டமைப்புகள் நீக்கப்பட்டன. மேலும் நேரில் சென்று இது தொடர்பான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களுக்கு பிறகு, உண்மையான எல்லைக் கோட்டின் இந்திய பகுதிகளான பி.பி.15 மற்றும் பி.பி.17ஏ பகுதிகளில் ப்ளாட்டூன் அளவு ராணுவப்படைகள் பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இரு தரப்பினரும் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்ற மன நிலையுடன் இல்லை.

இந்த புள்ளிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் மத்தியில் 500 மீட்டர் இடைவெளி உள்ளது. இந்த நிலைமையை தக்க வைப்பது மிகவும் கடினமானது எனவே ராணுவ வீரர்களை உடனே திரும்பப் பெற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் நிலைமை கையை மீறிப் போகலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிப்ரவரி மாதத்தில் பாங்கோங் சோவின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் நிறுத்தப்பட்ட ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். இதற்கு முன்பு சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இரு நாட்டு ராணுவப்படைகளும் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்தனர்.

சனிக்கிழமையன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கிய கூட்டம், மாலை 7.30 மணி வரை நீடித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் முந்தைய ஆலோசனைக் கூட்டங்களுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான கால நேரம். அதிகாலை 2-3 வரை பேச்சுவார்த்தைகள் நீடித்ததும் கூட உண்டு. கூட்டத்திற்கு முன், அதிகாரிகள் பிபி 15 மற்றும் பிபி 17 ஏ ஆகியவற்றில் ஒரு முன்னேற்றத்தை அடைவார்கள் என்று அதிகாரிகள் நம்பினர். எத்தகைய இலக்கை அடைய முடியும் என்பதில் இருதரப்பினரும் தயார் நிலையில் இருந்தனர். இதில் பெரும்பாலானவை அரசியல் மட்ட பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக் கொள்ளப்பட்டது என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிபி15 மற்றும் பிபி17ஏ தவிர, கால்வான் பள்ளத்தாக்கில் பிபி14, மற்றும் பாங்கோங் சோவின் வடகரையில் உள்ள ஃபிங்கர் 4 மற்றும் தென்கரையில் ரெசாங் லா மற்றும் ரெச்சின் லா ஆகியவை பதட்டமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன. கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி நடைபெற்ற வன்முறை மோதல்களுக்குப் பிறகு PP14 இலிருந்து இரு தரப்பு படைகளும் விலகிவிட்டன, இந்த தாக்குதலில் 20 இந்தியர்கள் மற்றும் 4 சீனர்கள் கொல்லப்பட்டனர்.

டெப்சாங் சமவெளியில், சீனப் படைகள் இந்திய வீரர்கள் அவர்களின் பாரம்பரிய ரோந்து வரம்புகளான பிபி10, பிபி11, பிபி 11ஏ, பிபி12 மற்றும் பிபி13 ஆகியவற்றை அணுகுவதைத் தடுக்கின்றன. டெம்ச்சோவில், குடிமக்கள் என்று கூறிக் கொள்ளும் நபர்கள் இந்திய எல்லைக்குட்பட்ட சார்திங் நல்லா பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அது இது LAC.0ஐக் குறிக்கிறது.

பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, எல்லைப் பகுதிகளில், அவர்களின் நிலப்பரப்பில், நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்கி, உள்கட்டமைப்பு வளர்ச்சியை துரிதப்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது பதட்டமாக இருக்கும் இடங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏப்ரல் 9ம் தேதி அன்று இறுதியாக காப்ர்ஸ் - கமாண்டர்கள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரண்டு தரப்பினரும் கூட்டு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. சனிக்கிழமை அன்று, லெஃப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே மேனன் தலைமையிலான இந்திய பிரிவு தெற்கு சின்ஜியாங் ராணுவ மாவட்டத்தின் தளபதி, மேஜர் ஜெனரல் லியூ லின்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment