Advertisment

இந்தியா - சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை

இந்திய எல்லைக்குள் இருக்கும் அனைத்து சீன துருப்புகளும் திரும்பி பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது இந்தியா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ladakh tensions India China-LAC border Ladakh meetings

Shubhajit Roy , Sushant Singh

Advertisment

Ladakh tensions India China-LAC border Ladakh meetings :  கிழக்கு லடாக் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட ராணுவ தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக இரண்டு நாட்டு தூதுவர்களும் வீடியோ ஆலோசனை கூட்டத்தில் இணைந்தனர். இரு தரப்பில் இருக்கும் வேறுபாடுகளை களையவே முன்வர வேண்டுமே தவிர, இந்த பிரச்சனையை மோதல்களாக உருமாறுவதை அனுமதிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டுகளுக்கு இடையேயான நட்புறவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எல்லை நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு இன்று சுஷுல் - மோல்டோ என்ற பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா சார்பில் இந்த கூட்டத்தில் XIV கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தனது சீனப் பிரதிநிதியைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

To read this article in English

உடனடி தீர்வுகளுக்கான எதிர்பார்ப்புகள் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இது முதல்படியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை ஏற்கனவே சீனாவின் ஊடுருவல் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் தலைமை வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும் என தீர்மானித்துள்ளனர். 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோடி மற்ற்றும் சீன அதிபர் ஜிங்பிங் இருவருக்கும் இடையே நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டின் போது உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேடஜிக் கைடன்ஸ் (strategic guidance) அடிப்படையில் இந்த வழிகாட்டுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (கிழக்கு) நவீன் ஸ்ரீவாஸ்தவாவும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் வு ஜியாங்காவோவும் கலந்து கொண்ட காணொளி ஆலோசனை கூட்டத்தில் இரண்டு தூதர்களும் பங்கேற்றனர்.

மேலும் படிக்க : கர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்

இருதரப்பினரும், இரு நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கும் உறவு குறித்து சீராய்வு செய்தனர். மேலும் இந்த சூழலில், இரு நாட்டு தலைவர்களும் எட்டிய ஒருமித்த கருத்தை நினைவு கூர்ந்தனர். உலக அரங்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அமைதியான, நிலையான மற்றும் சீரான உறவுகள் ஸ்திரத்தன்மைக்கு காரணமாக அமையும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

"தலைமை வழங்கிய வழிகாட்டுதலுக்கு இணங்க, இரு தரப்பினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதியான கலந்துரையாடலின் மூலம் கையாள வேண்டும், ஒருவருக்கொருவர் உணர்திறன், கவலைகள் மற்றும் அபிலாஷைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, அவை சர்ச்சைகளாக மாற அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே கருத்தினை ஆதரிக்கும் வகையில், சீன தூதர் சன் வெய்டோங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இரு தரப்பினரும் இரு தலைவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர், சீனாவும் இந்தியாவும் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது மற்றும் ஒருவருக்கொருவர் வளர்ச்சி வாய்ப்புகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். மேலும் வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்று ட்வீட் செய்திருந்தார்.

சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் கெங் ஷூவாங் “தற்போது இந்திய - சீன எல்லை பகுதிகள் நிலைத் தன்மையுடனும், கட்டுப்பாட்டுக்குள்ளும் உள்ளது. இருதரப்பினரும் ராணுவம் மற்றும் அதிகாரிகள் மூலம் நிலையான தொடர்பில் இருந்து வருகின்றனர். தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளை சரி செய்ய இருதரப்பினரும் வேலை செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

இந்த எல்லை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்தியர்கள் ஒரே கூட்டத்தில் உடனடியாக முடிவினை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த கூட்டம் அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இறுதியாக முடிவை எட்டுவதற்கு முன்பு இது போன்று நான்கு அல்லது ஐந்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

இது போன்ற ஆலோசனை கூட்டங்களில், முடிவெடுக்கும் அதிகாரம் என்பது எப்போதும் தலைமை தாங்கும் தளபதிகளுக்கு இருப்பதில்லை. இந்த ஆலோசனை காலத்திலும் கூட, சில நேரங்களில், தங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும் என்று கூட்டத்தை ஒத்தி வைக்க கேட்டுக் கொள்கின்றனர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

சீன அதிகாரிகளின் பதிலை மனதில் கொண்டு, இறுதி முடிவை இன்றே எட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் கடினம். பாங்கோங் சோவில் சீனர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர் என்பதை உறுதியாக தெரிவிப்போம் என்று மற்றொரு அதிகாரி கூறியுள்ளார். சீன எல்.ஏ.சி. ,ஃபிங்கர் 4, பாங்கோங் சோவில், எல்.ஏ.சி.யின் மேற்கு பகுதியில் இருந்து 8 கி.மீ அப்பால் உள்ளது என்று கூறுகிறது. ஆனால் இந்த மாத துவக்கத்தில், எல்லையில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பே, இந்திய ராணுவம் ஃபிங்கர் 8 வரை ரோந்து பணி செய்துள்ளது. இந்தியா தங்களின் பிரதேசமாக கருதும் பகுதியில், சீன துருப்புகள் அதிக அளவில் ஊடுருவியதாக செயற்கை கோள் படங்கள் காட்டுகிறது.

இந்திய எல்லைக்குள் சீன படைகள் நகர துவங்கிய நாட்களுக்கு முன்பு இருந்த (ஏப்ரல் இறுதியில் இருந்த) எல்லையை மீட்டெடுக்கும் வகையில் இந்த சந்திப்புக்கான நிரலை தயாரித்துள்ளது இந்தியா. இந்திய எல்லைக்குள் இருக்கும் அனைத்து சீன துருப்புகளும் திரும்பி பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது இந்தியா . மேலும் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவமும் மேற்கொள்ள இருக்கும் ரோந்து பணிகள் தொடர்பான பிரச்சனைகளையும் இந்தியா எழுப்ப உள்ளாது. பாங்கோங் சோ பகுதியில், இந்திய துருப்புக்கள் ஃபிங்கர் 8 வரை ரோந்து செல்ல சீன படையினர் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் கனரக ராணுவ ஆயுதங்களையும், துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளையும் குறைக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட உள்ளது. இது இரு தரப்பில் இருக்கும் பதட்டமான சூழலை குறைத்து நம்பிக்கை ஏற்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை இது உருவாக்கித் தரும் என்றும் இந்தியா கருதுகிறது. இந்திய எல்லைக்குள் உருவாக்கப்படும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு விவகாரங்களை சீன எதிர்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்த உள்ளது. 255 கி.மீ நீளம் கொண்ட தர்புக் - ஷையோக் - தௌலத் பெக் ஓல்டி சாலை திறக்கப்படுவது, லேட்ரல் சாலைகள் உருவாக வழி வகுக்கும் என்று சீனா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Ladakh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment