Advertisment

சீனாவுடன் பிணக்கு; இந்தியாவுடன் இணைந்து எண்ணெய் கிணறு வயல்களை மேம்படுத்த இலங்கை முடிவு

கெட்டுப்போன ஆர்கானிக் உரம், சரக்கு கப்பல் மூலம் சீனாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இது இரு நாட்டினருக்கும் இடையே பதட்டமான சூழலை உருவாக்கியிருக்கும் இந்த தருணத்தில் டெல்லியின் உதவியை பல்வேறு காரணங்களுக்காக நாடியுள்ளது கொழும்பு.

author-image
WebDesk
New Update
Lanka readies oil tank farm deal with India

Nirupama Subramanian

Advertisment

Lanka readies oil tank farm deal with India : பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை சமீபத்தில் இந்தியாவின் உதவியை நாடியிருக்கும் நிலையில் இலங்கைக்கு வருகை புரிய உள்ளார் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி. கொழும்பு டெல்லியின் உதவியை நாடியுள்ள இதே சமயத்தில், வெகுநாட்களாக கிடப்பில் போடப்பட்ட திருகோணமலை எண்ணெய் கிணறு வயல்களை மேம்படுத்தும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

கெட்டுப்போன ஆர்கானிக் உரம், சரக்கு கப்பல் மூலம் சீனாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இது இரு நாட்டினருக்கும் இடையே பதட்டமான சூழலை உருவாக்கியிருக்கும் இந்த தருணத்தில் ஜனவரி 7 மற்றும் 9ம் தேதிகளில் இலங்கை வர உள்ளார் வாங் யி.

சமீபத்தில் கொழும்பு சீனாவில் இருந்து 90 ஆயிரம் டன் ஆர்கானிக் உரத்தை இறக்குமதி செய்யும் உத்தரவை ரத்து செய்தது. இதற்கு பதிலாக இலங்கை அரசால் நடத்தப்படும் பீப்பிள்ஸ் பேங்கை கறுப்பு பட்டியலில் வைத்த சீனா, அதன் கடன் செலுத்தும் கடிதத்தில் தவறு இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த மாத துவக்கத்தில் 8 மில்லியன் டாலர் இழப்பீட்டினை திரும்ப பெற நடவடிக்கைகளை மேற்கொண்டது சீனா. 6.4 மில்லியன் டாலர்களை தருவதாக ஒப்புக் கொண்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை. இழந்த நல்லெண்ணத்தை மீட்கும் வகையில் சில நல்ல திட்டங்களை வாங் யி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதற்கு இடைப்பட்ட தருணத்தில் இருநாட்டு கூட்டு முயற்சியில் திரிகோணமலையில் மிகப்பெரிய எண்ணெய் கிணறு வயலை உருவாக்கும் திட்டத்திற்கான இறுதி கட்டத்திற்கு முன்னேறியுள்ளது கொழும்பு. இது குறித்து இரு நாடுகளும் அதிகப்படியான தகவல்களை வெளிப்படுத்தவில்லை என்றாலும் டெல்லி, தற்போது இலங்கையில் நிலவி வரும் பிரச்சனையை சமாளிக்க நிதி உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு விவகாரங்களும் ஒரே மாதிரியாக முன்னேற வேண்டும். ஒன்றின் முன்னேற்றம் மற்றொரு விசயத்தின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்து பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் வருகின்ற மாதங்களில் திரிகோணமலை திட்டத்தின் முன்னேற்றங்களை நாம் காண்போம் என்றும் அவர் கூறினார்.

நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 1.6 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. பற்றாக்குறை காரணமாக உணவு இறக்குமதி குறைந்து, நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தற்போது நிலவி வரும் நிலைமையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் (International monetary fund) உதவியை நாடுவதை இலங்கை எடுக்க விரும்பாத ஒரு முடிவாக உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச், இலங்கையை CC இலிருந்து CCC க்கு தரமிறக்கியது. இலங்கையின் இரண்டு சர்வதேச அரசு பத்திரங்களை ( international sovereign bonds) செலுத்த தவறலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளது. ஒரு பத்திரத்தின் மத்ஹிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இதனை திருப்பி செலுத்த ஜனவரி 2022 இறுதி மாதம். 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள மற்றொரு பத்திரத்தை ஜூலையில் செலுத்த வேண்டும். இலங்கையின் மத்திய வங்கி ஃபிட்சின் இந்த செயலை அவசர கதியில் எடுத்துள்ளதாக கூறியது. மேலும் நிதி உதவிக்காக நட்பு நாடுகளுக்கு கொழும்பு இராஜதந்திர நடவடிக்கைளை எடுத்து வருவதை கருத்தில் கொள்ளவில்லை என்றும் கூறியது. டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 இறுதிக்குள் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வரவுகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் மொத்த அதிகாரப்பூர்வ கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருக்கும் என்றும் இலங்கை அரசும் மத்திய வங்கியும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனாவின் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான SWAP வசதியை ஃபிட்ச் புறந்தள்ளியதாக செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

கடன்கள் மற்றும் வெளிநாட்டு பண நிதி ஒப்பந்தங்கள் தவிர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் பெய்ஜிங்கில் இலங்கை மூன்று ஆண்டுக்கான ஸ்டேண்ட்பை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் இந்த மாதத் துவக்கத்தில் அரசு சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்த நிதியை பயன்படுத்தும் என்று தெரிவித்தார்.

நான்கு அம்ச கோரிக்கை

ஆனால் கொழும்பு இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது. நவம்பர் மாதம் டெல்லிக்கு வருகை புரிந்த இலங்கை நிதி அமைச்சர் பாசில் ராஜபக்‌ஷே, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

  1. எரிபொருள் இறக்குமதிக்கான கடனை இந்தியாவிடம் இருந்து மட்டுமே பெறுவது
  2. இந்தியா - இலங்கை கூட்டு முயற்சியில் திரிகோணமலையில் உள்ள எண்ணெய் கிணறு வயல்களை மேம்படுத்துவது
  3. வெளிநாட்டில் பெற்ற கடன்களை திரும்பி செலுத்த பணபரிமாற்று முறையை பின்பற்றுவது
  4. பல்வேறு துறைகளில் இந்தியாவின் முதலீடுகளை அதிகரிக்க விதிமுறைகளை எளிதாக்குவது

இந்த வாரத்தின் துவக்கத்தில், இலங்கையின் சன்டே டைம்ஸ் வார இதழ் வெளியிட்டிருந்த அறிக்கையில் ”எரிசக்தி துறை அமைச்சர் உதயா கம்மன்பிலா, சிலோன் பெட்ரோலிய கார்ப்பரேசன் தலைவரிடம் ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிட்டட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற துணை நிறுவனத்தை அமைக்குமாறு கூறினார். இந்தியா இலங்கை கூட்டு முயற்சிக்கு இது முக்கியமான ஒன்றாக செயல்படும். இந்த முடிவு அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் ”துணை நிறுவனத்தை அமைப்பதற்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே அனுமதி வழங்கியுள்ளார்” என்றும் குறிப்பிட்டிருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment