Advertisment

பல வருட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த நிசாமின் 35 மில்லியன்... வாரிசுகளால் ஏற்படும் புதிய குழப்பம்

இரு சகோதரர்களும் இப்போது சொந்தமாக ஒரு முடிவை எடுத்து மீதமுள்ளவர்களை துண்டித்து விட முடியாது. ” என்று தெரிவித்துள்ளனர்.

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
பல வருட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த நிசாமின் 35 மில்லியன்... வாரிசுகளால் ஏற்படும் புதிய குழப்பம்

Last Nizam’s heirs : லண்டன் வங்கியில் இருந்த ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணம், இந்தியாவுக்கே சொந்தம் என்று இங்கிலாந்து நீதிமன்றம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. பல வருட போராட்டங்களுக்கு பின்பு கிடைத்த இந்த தீர்ப்பின் மூலம் பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

Advertisment

இந்நிலையில், தற்போது நிஜாமின் தொகை பகிர்ந்துக் கொள்வதில் அவரின் சந்தகத்தினர் இந்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்திற்கு நகர்த்த வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் லண்டனில் உள்ள நீதிக்கான ராயல் நீதிமன்றத்தின் நீதிபதி மார்கஸ் ஸ்மித் இந்த சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.

அதாவது, ‘7ஆவது நிஜாமுக்கு (உஸ் மான் அலி கான்) உரிமையுள்ள இந்த நிதி, அவரது வாரிசுகளான இளவரசர்கள் மற்றும் இந்தியாவுக்கு சொந்தமான தாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாகிஸ்தான் வைத்த வாதங்கள் தவறானவை’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.இந்த வழக்கில் நிஜாம் வாரிசுகளின் சார்பாக இந்திய அரசும் கைக்கோர்த்திருந்தது. நிஜாம் உயிருடன் இல்லாத நிலையில் இந்தப் பணம் இந்தியாவுக்கும் அவரின்இரண்டு பேரன்களுக்கும் தான் சொந்தம் என்று உறுதியானது.

உஸ் மான் அலி கான் மகன் ஹாஷிம் ஜா பகதூரின் 5 ஆவது மகன் நவாப் நஜாப் அலி கான், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியிருப்பதாவது, “ 7 ஆவது நிஜாமின் வாரிசுகளான முகராம் ஜா, அவரது தம்பி முஃபா இருவர் மட்டுமே இந்த தொகையை பிரித்துக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். அவர்கள் இதுவரை எங்களை தொடர்பு கொள்ளவில்லை ஆனால் அதுக் குறித்து திட்டமிட்டு வருகிறார்கள்.

அதே போல் இந்த வழக்கில் பாகிஸ்தான் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதா? என்றும் நாங்கள் யோசித்து வருகிறோம். எங்களின் சகோதரர்கள் இந்த வழக்கை இந்திய அரசிடம் ஒப்படைத்தபோது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. வழக்கு வென்றால், பணம் அனைத்து சந்ததியினருக்கும் அரசாங்கத்திற்கும் விநியோகிக்கப்படும். இரு சகோதரர்களும் இப்போது சொந்தமாக ஒரு முடிவை எடுத்து மீதமுள்ளவர்களை துண்டித்து விட முடியாது. ” என்று தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் இந்தியாவின் சட்ட ஆலோசகரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே,இதுப்பற்றி கூறியிருப்பதாவது, “டிசம்பர் 19 தெளிவான முடிவு கிடைத்துவிடும். பாகிஸ்தான் இங்கிலாந்து நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமா? என்ற சந்தேகமும் அன்று தீர்ந்துவிடும். மேலும் இந்தியாவுக்கும் இளவரசர்களுக்கும் தொகை பகிர்ந்து அளிப்பதற்கான முறைகள் தெளிவாக விவாதிக்கப்படும்.தீர்வுக்கான முறைகளைத் தவிர, இந்த வழக்கை தொடங்கியதற்காக பாகிஸ்தான் செலுத்த வேண்டிய சட்ட செலவுகளையும் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்மானிக்கும்.” என்று கூறியுள்ளார்.

நஜாப் அலி பதிவு செய்திருக்கும் கருத்துப்படி, 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிஜாமின் 120 சந்ததியினர் உயிருடன் இருந்தனர். பின்பு அவர்களின் சிலர் இறந்து விட்டனர். அக்டோபர் 2 ம் தேதி இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் முகராம் மற்றும் முஃபா - மற்றும் இந்தியா என இரண்டு “இளவரசர்கள்” மற்றும் இந்தியா பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இந்த வழக்கில் முக்கிய பங்குகளை ஆற்றியுள்ளனர். ” என்றூ தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் வசிக்கும் ஒரு சந்ததியினர் இதுப்பற்றி கூறியிருப்பது, “நிஜாமின் வாரிசுகள் தங்களது செல்வத்தை இன்னும் மெருகேற்றிக்கொள்ள திட்டமிட்டுருப்பார்கள். மிர் ஒஸ்மானுக்கு 16 மகன்களும் 18 மகள்களும் இருந்தனர், மற்றும் 104 பேரக்குழந்தைகள். ஹைதராபாத், மும்பை, புது தில்லி, பெங்களூரு, இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியா போன்ற இடங்களில் அவர்கள் குடியேறினர்.” என்று கூறியுள்ளனர்.

வெவ்வேறு வாரிசுகளின் கூற்றுப்படி, பிற்கால தலைமுறையினர் தொழில் ரீதியாக மிகச் சிறப்பாக செயல்படவில்லை, கடைசியாக நிஜாம் நிறுவிய 54 அறக்கட்டளைகளால் வழங்கப்பட்ட பண பலன்களை தந்து அவர்கள் புல பெயர்ந்தாக கூறப்படுகிறது.

எனவே, நிஜாமின் அடுத்தடுத்த வாரிசுகள் அவர்களின் குடும்பங்கள் அனைவரும் சொத்துக்களை பல்வகையில் இழந்து இப்போது சிலர் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதனால் தற்போது வரும் பணத்தை 2சகோதர்கள் மட்டுமே பிரித்துகொண்டால் மற்றவர்களுக்கு எதுவே கிடைக்காது என்பதே அவர்களின் பயமாக இருக்கிறது. எனவே, அவர்கள் சந்கதியினருக்கு பிரித்து தரும்படி வாதிடுகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment