Advertisment

Tamil News Updates : 22 தொகுதிகளில் திமுக 14 இடங்களை கைப்பற்றும் - புதிய எக்ஸிட் போல் முடிவு

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பினைப் படிக்க இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india today, exit poll

Latest News in Tamil: தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தேசம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்ததால் பங்குச்சந்தையில் நேற்று நல்ல ஏற்றம் காணப்பட்டது. இன்று பாஜகவுடன் கூட்டணியில் கை கோர்த்திருக்கும் கட்சிகள் டெல்லியில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Advertisment

மேலும் படிக்க : இன்று நடைபெறுகிறது பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

Blog

தேர்தல் முடிவுகள்  23ம் தேதி வெளியாவதை ஒட்டி, தீவிர கண்காணிப்பு பணியில் தேர்தல் ஆணையம்

17:37 (IST)21 May 2019


இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவுகள் : 5 தொகுதிகளில் கடும் போட்டி

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. 14 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். 3 தொகுதிகளில் அதிமுக ஜெயிக்கும். 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:24 (IST)21 May 2019


டில்லியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் ஆலோசனை

டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் ஆலோசனை .

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில் மீண்டும் ஆலோசனை

16:43 (IST)21 May 2019


வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஜெராக்ஸ் இயந்திரங்கள் : மதுரை திமுக வேட்பாளர் புகார்

இடைத்தேர்தல் நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் முன்னறிவிப்பு இன்றி ஜெராக்ஸ் இயந்திரம் கொண்டுசெல்ல அதிகாரிகள் முயற்சி -  திமுக வேட்பாளர் சரவணன் புகார்.

வாக்கு எண்ணும் மையத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்து எந்த தகவலும் எங்களுக்கு தரப்படவில்லை இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படும்- திமுக வேட்பாளர் சரவணன்

16:36 (IST)21 May 2019


எங்களின் கோரிக்கைகள் ஏற்பு : சந்திரபாபு நாயுடு

மக்களின் தீர்ப்பை மாற்றியமைக்க கூடாது என்பதே எங்களின் கோரிக்கை, இதனை முன்னாள் தேர்தல் ஆணையர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் -  ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தகவல்

16:35 (IST)21 May 2019


பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்ற கோரிக்கை இது: காங்கிரஸ்

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்ற 22 கட்சிகளின் கோரிக்கை இது என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

16:26 (IST)21 May 2019


மனுவில் உள்ள கோரிக்கைகள் என்னென்ன?

ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்கும் 5 வாக்குச்சாவடிகள் எது என்பதை, வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்னதாகவே அடையாளம் காண வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின் போது முரண்பாடுகள் தென்பட்டால், அந்த தொகுதியில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும்

16:25 (IST)21 May 2019


சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழுவினர் மனு அளிப்பு

டில்லியில், தலைமை தேர்தல் ஆைணயர் சுனில் அரோராவை சந்தித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், காங். உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் புகார் மனுவை அளித்தனர்.

15:03 (IST)21 May 2019


விதிமுறைகளை மீறிய பேசியதாக திருமுருகன் காந்தி மீது வழக்கு

தமிழ் இனப்படுகொலைகள் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் "தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீர வணக்க பொதுக்கூட்டம் மே 17 இயக்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது. அவர் விதிமுறைகளை மீறி பேசியதாக கூறி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153(A), 505(2) ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

14:29 (IST)21 May 2019


பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையரை சந்திக்கும் எதிர்கட்சித் தலைவர்கள்

21 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பிற்பகல் 3 மணி அளவில் தேர்தல் ஆணையரை சந்தித்து வாக்கெடுப்பு தொடர்பாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

14:09 (IST)21 May 2019


வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க கோரிய மனு நிராகரிப்பு

தேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இது வகை பொதுநல மனுக்கள், பெரும் தொல்லை என்றும், மக்கள் அவர்களின் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அனுமதிப்போம் என்றும் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு

14:07 (IST)21 May 2019


13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் - டிடிவி தினகரன் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை சுட்டுக் கொன்றது தமிழக காவல்த்துறை. இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

14:01 (IST)21 May 2019


Over all polling percentage

7 கட்டங்களாக ஏப்ரல் 11ம் தேதி  முதல் மே 19ம் தேதி வரை நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை விட 1.16% அதிகம் என்றும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். வாக்கு எண்ணும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நாளை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்துகிறார். தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

11:59 (IST)21 May 2019


2019 Election Results FAQ

தேர்தல் தொடர்பாக உங்களுக்கு எழும் அனைத்துவிதமான  சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க இந்தியன் எக்ஸ்பிரஸின் புதிய முயற்சி.

உங்களின் அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் இங்கே

11:14 (IST)21 May 2019


முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை

23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் இருக்கும் முகவர்கள் கவனுத்துடன் செயல்பட வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரையில் மோசடிகள் நடைபெறாத வகையில் முகவர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில் அறிவித்துள்ளார்.

11:13 (IST)21 May 2019


தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மனுவை கொடுத்த டி.ஆர். பாலு

வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், ஒப்புகைச் சீட்டினை சரிபார்க்கும் போதும் முகவர்கள் உடனிருக்க அனுமதி வேண்டும் என்று திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தமிழக தேர்தல் தலைவர் சத்ய ப்ரதா சாஹூவை நேரில் சந்தித்து மனு அளித்து பேசி வருகிறார்.

11:06 (IST)21 May 2019


வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துங்கள் - திமுக மனு

23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என தமிழக தேர்தல்  அதிகாரி சத்ய ப்ரதா சாஹூவிடம் திமுகவினர் மனு

10:39 (IST)21 May 2019


மேற்கு வங்கத்தில் மறு வாக்குப்பதிவு

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அமைந்திருக்கிறது உத்தர் தொகுதி. அதன் 200வது வாக்குச் சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு வாக்குப் பதிவு நடைபெறும்.

10:23 (IST)21 May 2019


நீர் பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வேண்டும் - முக ஸ்டாலின்

குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் என்றும், அதற்காக கர்நாடகாவில் இருந்து தண்ணீரைப் பெறு வேண்டும் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார். ஜூன் 12ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரைப் பெற்று மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

10:12 (IST)21 May 2019


ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்

இன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் இறந்த  தினம். தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்தவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க  

09:55 (IST)21 May 2019


EVM மெஷினில் மோசடி நடைபெற்றதாக குற்றம் சாட்டும் எதிர்க்கட்சினர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெற்றாதாக ஆரம்பம் முதலே கூறி வந்தனர் எதிர்கட்சினர். தற்போது அந்த மோசடிகள் குறித்து புகார் அளிக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உட்பட 21 கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளனர். இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை உருவாக்கித் தரவும் வேண்டுகோள் விடுக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

19ம் தேதி எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

மேலும் படிக்க : Tamil Nadu Lok Sabha Election 2019 Controversies: ‘தேர்தல் ரத்து முதல் இந்து தீவிரவாதி வரை’! கோடை அனலை விஞ்சிய தமிழக தேர்தல் களம், ஒரு ரீவைண்ட்!

General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment