Advertisment

அனைவருக்குமான காங்கிரஸ் தான் இன்றைய தேவை - கபில் சிபலுடன் ஒரு எக்ஸ்க்ளூசிவ்

2014ம் ஆண்டு துவங்கி காங்கிரஸில் இருந்து 177 எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும், 222 வேட்பாளர்களும் வெளியேறியுள்ளது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு அரசியல் கட்சி இப்படியான வெளியேற்றத்தை கண்டிருக்காது.

author-image
WebDesk
New Update
Punjab exits give fuel to G-23 Kapil Sibal Ghulam Nabi Azad speak up

Kapil Sibal reaction to assembly elections results: சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ். அதனை தொடர்ந்து பல மாற்றங்களை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்படுத்தும் என்று நினைத்த நிலையிலும் கூட பழைய பாடலே பாடப்பட்டது. இது தொடர்பாகவும், காங்கிரஸின் தலைமை மாற்றம், நிர்வாக மாற்றம் தொடர்பாகவும் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஜி23 தலைவர்களில் ஒருவருமான கபில் சிபில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர் மனோஜின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

Advertisment

காங்கிரஸ் மற்றொரு தோல்வியை சந்தித்துள்ளது. ஞாயிறு அன்று நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் அதே பழைய பாணி நடவடிக்கைகளே பின்பற்றது. தோல்வி மற்றும் காரிய கமிட்டியின் முன்னேற்றங்கள் உங்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளதா?

இந்த முடிவுகள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. 2014ம் ஆண்டில் இருந்தே நாங்கள் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாநிலமாக நாங்கள் தோல்வியை தழுவி வருகின்றோம். வெற்றி அடைந்த இடத்திலும் கூட எங்கள் கட்சியினரை ஒன்றாக வைத்திருக்க இயலவில்லை. அதே நேரத்தில் தலைமை மீது அதிக அளவில் நம்பிக்கைக் கொண்டிருந்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். 2022ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்றனர். நான் அந்த எண்ணிக்கையை கவனித்த வண்ணமே இருக்கின்றேன். 2014ம் ஆண்டு துவங்கி காங்கிரஸில் இருந்து 177 எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும், 222 வேட்பாளர்களும் வெளியேறியுள்ளது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு அரசியல் கட்சி இப்படியான வெளியேற்றத்தை கண்டிருக்காது.

அவமானப்படுத்தும் தோல்விகளை நாங்கள் அவ்வபோது சந்தித்திருக்கின்றோம். நாங்கள் நம்பிய பல மாநிலங்களில் நாங்கள் பெற்ற வாக்குகள் மிகவும் குறைவாக உள்ளது. உ.பியில் எங்களின் வாக்கு வங்கி 2.33% ஆக சரிந்துள்ளது ஆனாலும் அதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. வாக்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த இயலவில்லை. முன்னோக்கி மக்களை வழிநடத்த அவர்களை அணுக இயலவில்லை. அணுகல் என்பதே எங்கள் பொது விவாதத்தின் பொருளாகும். நேற்று குலாம் நபி ஆசாத் கூறியது போல், ஒரு தலைவர் அணுகக் கூடியரவாகவும், பொறுப்பேற்றுக் கொள்ள்ள கூடியவரகாவும் இருக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய பண்புகள் இல்லாமல் இருப்பது தான் பிரச்சனையாக உள்ளது. எனவே முடிவுகள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.

வாக்காளர்களின் முடிவு சொல்வது என்ன?

காரிய கமிட்டியின் கூட்டம் பற்றி?

காரிய கமிட்டி கூட்டத்தில் ஞாயிறு அன்று நடந்த நிகழ்வுகளும் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. 2014ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 8 ஆண்டுகள் கழித்து தோல்விக்கான காரணங்களை ஆராய பரிசீலனை கூட்டம் நடத்துவோம் என்று கட்சியின் தலைமை கூறியிருப்பது கட்சியும், தலைமையும் கட்சியின் அழிவைப் பற்றிய காரணங்களை அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. பரிசீலனைக் கூட்டம் மூலம் காரணங்களை அறிய காத்திருக்கிறது என்றால், அந்த கட்சியின் தலைமை இதுவரை நம் கண் முன்னால் நிகழ்வும் எதார்த்தை அறியாமல் கண்களை மூடிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.

இந்தப் போராட்டம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது அல்ல. ஒரு சிந்தனை செயல்முறையை பிரதிபலிக்கும, ஒற்றுமையில் இருந்து வந்தது காங்கிரஸ். அசல் காங்கிரஸ் இந்து மதத்தைச் சேராத ஒருவரிடமிருந்து பிறந்தது. அந்த குடையின் கீழ், அனைவரும் அந்த சிந்தனை செயல்முறையில் ஆழ்ந்த ஈடுபாடு மற்றும் உறுதியுடன் செயல்பட்டனர். அதிகார அமைப்புகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன, அந்த குடைக்குள், அனைவரும் பங்கேற்கிறார்கள். அதனால்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் மாறுவது வழக்கமாக இருந்து வரலாறானது. ஒருவர் நீண்ட காலம் தலைவராக இருப்பது வெகு சமீபத்தில் நடந்த ஒன்று தான்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் இருக்கும் ஒரு சில முக்கியமான தலைவர்கள் உண்மையாகவே காந்தி குடும்பம் இல்லை என்றால் காங்கிரஸ் வாழ்வது கடினம் என்று நம்ம்புகின்றனர். அது சாத்தியமான பார்வை தான். ஆனால் நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் கருத்து அவை அல்ல. வழக்கம் போல் காங்கிரஸ் நடக்கும் பட்சத்தில் நாம் பிழைத்துக் கொள்வது கடினமான ஒன்றாகும். கட்சியை சீர் திருத்தம் செய்து, மறுமலர்ச்சி ஏற்படுத்தி முந்தைய காங்கிரஸின் மகிமையை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது என்ற செய்தியை நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து தலைமைக்கு கூற விரும்பினோம். நான் இன்று நான் பேசுகின்றேன் என்றால் நான் யாருக்கும் எதிராக கோபம் கொண்டிருக்கவில்லை. அங்கிருக்கும் யாருக்கும் எதிரானவன் என்பதால் அல்ல, நான் இன்று பேசுகிறேன் என்றால் நான் காங்கிரஸின் ஆதரவாளன் என்பதால் மட்டுமே. என்னுடைய கடைசி காலம் வரை வேறொரு கட்சியில் சேரமாட்டேன். என்னுடைய சடலம் கூட பாஜகவில் சேராது. நான் என்னுடைய எண்ணங்களிலும் செயல்களிலும் ஒரு காங்கிரஸ் கட்சிக்காரனாகவே இருப்பேன். ஆனால் மக்கள் கேட்கத் தயாராக இல்லாததால் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்து அதன் பெருமையை இப்படி இழப்பதை என்னால் பார்க்க முடியாது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உட்பட பலர் ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். காரிய கமிட்டியில் உள்ள பலர் சோனியா மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வெளியே இருக்கும் நபர்களைக் காட்டிலும் உள்ளே இருக்கும் நபர்கள் மத்தியில் அதிக வித்தியாசம் இருக்கிறதே?

காரிய கமிட்டி காங்கிரஸ் கட்சிக்குள் தானே இருக்கிறது? காரிய கமிட்டி உறுப்பினர்கள் யாவரும் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர்கள். காரிய கமிட்டிக்கு வெளியே ஒரு காங்கிரஸ் இருக்கிறது. நீங்கள் கேட்க விரும்பினால் அவர்களின் விருப்பங்களையும் கேளுங்கள். நீங்கள் காங்கிரஸுக்கு வெளியே உள்ள மக்கள் என்று பேசினால் நீங்கள் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும், காரிய கமிட்டிக்கு வெளியே இருக்கும் நபர்களை நீக்கிவிட்டு பேசுகிறீர்கள் என்று பொருள். நானும் அந்த நபர்களில் ஒருவர் என்று நினைக்கின்றேன். நான் காங்கிரஸ் கட்சிக்கு வெளியே இல்லை. நான் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கின்றேன் ஆனால் காரிய கமிட்டிக்கு வெளியே உள்ளேன். என்னைப் போன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக்கு வெளியே இருக்கும் பல தலைவர்களும் பல்வேறு கருத்துகளையும், பார்வைகளையும் கொண்டுள்ளனர். காரிய கமிட்டியில் இல்லாத காரணத்தால் எங்களின் கருத்துகளுக்கு மதிப்பில்லையா என்ன? காரிய கமிட்டியைப் பொறுத்தமட்டில் அவர்கள் இந்திய காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கும் குழு என்று நம்புகின்றார்கள். ஆனால் அது உண்மை என்று நான் கருதவில்லை. நீங்கள் கூறும் கருத்தை ஏற்காத காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் உள்ளனர், அசாமிலும், ஜம்மு காஷ்மீரிலும், மகாராஷ்ட்ராவிலும், உபியிலும், குஜராத்திலும் உள்ளனர்.

காரிய கமிட்டியில் இல்லாத உங்களைப் போன்ற இதர காங்கிரஸ் தலைவர்கள், காந்தி குடும்பத்தினர் தலைமைப் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்ள இது தான் சரியான நேரம் என்று நம்புகிறார்களா?

நான் மற்றவர்களுக்காக பேச இயலாது. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் அனைவருக்குமான காங்கிரஸ்தான் இன்றைய தேவையே அன்றி காங்கிரஸ் குடும்பம் தேவையில்லை. அனைவருக்குமான காங்கிரஸூக்காக என்னுடைய ஆயுள் முழுவதும் நான் குரல் கொடுப்பேன். ”சப் கி காங்கிரஸ்” என்பது அனைவரையும் ஒன்றுபடுத்துவது மட்டுமின்றி இந்தியாவில் பாஜக வேண்டாம் என்று நினைக்கும் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும். அனைத்து மக்களும் பார்க்கும் விதத்தை உற்று நோக்குங்கள், மாற்றத்திற்கான அனைத்து சக்திகளும், இந்த நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் இந்த எதேச்சதிகாரப் பிடிப்புக்கு எதிரானவர்கள் செல்லும் பாதையில் உங்களின் கால்தடத்தை பதித்து விரிவுபடுத்துங்கள். இந்த நபர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மமதா, சரத் பவார் எல்லாம் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்கள். பிரிந்து சென்ற அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் திரும்பி வர வேண்டும். இந்த நாட்டில் எந்த அரசியல் கட்சியையும் சேராத லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர், ஆனால் அவர்களின் சிந்தனை செயல்முறைகள் அனைத்தும் ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கம், எதிர்காலத்திற்கான மாற்றம், மற்றும் சாதாரண மக்களின் முன்னேற்றம்… வறுமையை ஒழித்தல், கல்வியறிவின்மையை நீக்குதல் என்ற காங்கிரஸ் சிந்தனை செயல்முறையுடன் இணைந்துள்ளது. அதை நம்பும் லட்சக் கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்களும் தங்களின் சிந்தனை செயல்முறைகளில் காங்கிரஸ்காரர்களே. ஒரு சில மக்கள் காங்கிரஸ் கட்சியில் ஏ,பி, சி இல்லைனெறால் காங்கிரஸ் வாழாது என்று நம்புகின்றனர். அது தான் தற்போது சவாலாக உள்ளாதே அது ஏ, பி, சிக்கு எதிரானது அல்ல.

ராகுல் காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பலர் கூறிய கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டீர்கள்… எனக்கு அது புரியவில்லை. இதைச் சொல்பவர்கள் இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்பது தெளிவாகிறது. ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவர் அல்ல என்றும் சோனியா தான் தலைவர் என்றும் நம்புகின்றோம். ஆனால் ராகுல் காந்தி பஞ்சாப் சென்று சரண்ஜித் சிங் சன்னி தான் முதல்வராக போகிறார் என்று அறிவிக்கிறார். எந்த அடிப்படையில் அவர் இப்படியாக செய்கிறார்? அவர் இந்த கட்சியின் தலைவர் இல்லையே தவிர அனைத்து முடிவுகளையும் அவர் தான் மேற்கொள்கிறார். உண்மையில் அவர் தலைவராக இருந்தாலும் கூட அதிகாரப்பூர்வமாக தலைவராக வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர் அதனால் தான் அவர்கள் அந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு அப்போது யார் காரணம் என்று கூறுகிறீர்கள்?

புது முகங்கள், இளைஞர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், ஒருங்கிணைக்கும் திறன் கொண்டவர்கள், தத்துவம் பேசும் திறன் கொண்டவர்கள், அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் நபர்கள், களத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஊக்கமளிக்கும் அனைவரின் கலவையாக எந்த ஒரு அமைப்பும் இருக்க வேண்டும்.

இன்று நாம் காணும் அமைப்பிற்கு அடித்தளமே இல்லை. கடந்த காலங்களில் தீர்வுகளுக்காக எடுக்கப்பட்ட எந்த முன்னெடுப்பும் தற்போது இல்லை. அனைத்து அதிகாரங்களும் தலைமையிடம் குவிந்துள்ளது. களத்தில் அதிகாரம் பரவலாக்கப்படவில்லை. மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும் கூட தேர்வு செய்யப்படவேண்டியவர்களின் பட்டியல் தலைவருக்கு அனுப்பப்பட்டு பிறகு அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். தலைவர்களுடன் அவர்களுக்கு நேரடி தொடர்பு இல்லை. இந்த அதிகார அமைப்பில் எந்தவிதமான பார்வையும் இல்லாமல் உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். அரசியலில் ஒழுக்கம் என்பது பொருத்தமற்றதாகிவிட்டது.

தலைவர்கள் இன்று ஒன்று சொல்கிறார்கள். அதற்கு எதிர்மறையாக நாளை ஒன்று சொல்கிறார்கள். அதிகாரப்பூர்வ கார், குடியிருப்பை மறுத்து சாதாரண இல்லத்தில் வசிப்போம் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் யாரும் ஊழல் இல்லாதவர்களாக இருப்பதை உறுதி செய்வோம் என்று ஒரு சிலர் கூற பலரோ இது வெறும் வெற்று சொல்லாடல்கள் என்று கூறுகின்றனர். பலர் பெரிய பெரிய மாளிகைகளை கட்டுகின்றனர். திடீரென அவர்களின் உறவினர்கள் பலர் பண வசதி கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர். நாம் போராட வேண்டிய போர் மோடி ஆட்சிக்கு எதிரானது. இது காங்கிரஸுக்குள்ளேயே போராட வேண்டிய போர் அல்ல. மோடி ஆட்சியை எதிர்த்துப் போராட காங்கிரஸ் ஒன்றுபட வேண்டும். ஆனால் உங்களால் உங்கள் வீட்டைக் கூட ஒழுங்காக வைத்திருக்க முடியாவிட்டால், மோடி ஆட்சியை எப்படி எதிர்த்துப் போராடுவீர்கள்?

காந்தி குடும்பத்தினரால் தேர்வு செய்யப்பட்டதால் தான், தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று அவர்களிடம் கூற ஒரு காங்கிரஸ் தலைவர்களும் முன்வரவில்லை என்று கூறுகின்றீர்களா?

முதல்வர்கள் வந்து, நீங்கள் இந்த கட்சியை ஆளக் கூடாது என்று கூறுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்காதீர்கள்.

ஆனால் கடந்த காலங்களில் இப்படி நடந்துள்ளதே?

ஒரு திறந்த விவாதமாக இது எப்போதும் இருந்திருக்கிறது. சில நேரங்களில் மிகவும் விரும்பத்தக்க நிகழ்வாக இருந்ததில்லை. ஆனால் அது தனிப்பட்டதாகவும் இருந்ததில்லை. நாங்கள் நிலவை ஒன்றும் கேட்கவில்லை. நீண்ட நாட்கள் காத்திருந்தோம். பொறுமை என்பது ஒரு சிறந்த தர்மம். ஆனால் எந்த ஒரு நம்பிக்கையும் இன்றி காத்துக் கொண்டிருந்தால் அது தோல்வி தான். இது சுய ஏமாற்றத்திற்கு சமம்: நம்பிக்கை இல்லாதபோது பொறுமையாக இருப்பது. ஒரு ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள உரையாடலைக் கூட நடத்துவதற்குத் தலைமை உங்களை அணுகப் போவதில்லை என்றால் அங்கே நம்பிக்கை இல்லை என்று தான் அர்த்தம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment