பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

கால அவகாசம் 31-ம் தேதி வரை நீட்டிப்பு. மேலும், பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் இது குறித்து தெரிவித்துள்ளது: பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

×Close
×Close