Advertisment

எதைச் செய்யலாம், எவை கூடாது? 'லாக்டவுன்' விதிமுறை பட்டியல்

Lockdown News: 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருக்க வேண்டும். அத்தியாவசியமான உடல்நலத் தேவைகளுக்கு விதிவிலக்கு உண்டு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india lockdown, coronavirus

MHA Guidelines On Lockdown: மத்திய உள்துறை அமைச்சகம் பொது முடக்கத்தை மே 17 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கொரோனா பாதித்த பகுதிகளை சிவப்பு மண்டலம், ஆரஞ்ச் மண்டலம், பச்சை மண்டலம் என 3 பகுதிகளாக வகைப்படுத்தி, எதைச் செய்யலாம், எதை செய்யக் கூடாது என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

Advertisment

தடை செய்யப்பட்டவை (அனைத்து மண்டலங்கள்):

வான்வழிப் போக்குவரத்து, ரயில், மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து, பள்ளிகள் இயக்கம், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், சினிமா தியேட்டர், மால்கள், பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடங்கள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு மையங்கள், சமூக, அரசியல், கலாச்சார கூடுகைகள், மத ரீதியாக கூடும் இடங்கள்.

எனினும் மத்திய உள்துறை அனுமதித்தபடி குறிப்பிட்ட தேவைகளுக்காக வான்வழி, ரயில் வழி, சாலைவழிப் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசியம் அல்லாத அத்தனை நடவடிக்கைகளும் முழுமையாக தடை செய்யப்படுகிறது.

65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருக்க வேண்டும். அத்தியாவசியமான உடல்நலத் தேவைகளுக்கு விதிவிலக்கு உண்டு.

சிவப்பு மண்டலம் ( RED ZONES):

தடை செய்யப்பட்டவை:

சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ இயக்கம், டாக்சி, வாடகைக் கார் இயக்கம், மாவட்டங்களுக்கு இடையே அல்லது மாவட்டத்தின் உள்ளே பஸ்கள் இயக்கம், சலூன்கள் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.

அனுமதிக்கப்பட்டவை: அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக தனி நபர் மற்றும் வாகங்கள் இயக்கம் மேற்கொள்ளலாம். 4 சக்கர வாகனங்களில் டிரைவர் தவிர, இருவர் செல்லலாம். இரு சக்கர வாகனங்களில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி. நகர் பகுதியில் தொழில் நிறுவனங்கள் சமூக விலகல் நடைமுறைகளுடன் இயங்கலாம்.

நகர் பகுதியில் தனிநபர் கடைகள், காலனிகளை ஒட்டிய கடைகள், திறக்க அனுமதிக்கப்படும். அதில் அத்தியாவசியம், அத்தியாவசியம் அல்லாதவை என்கிற பாகுபாடு இல்லை. தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்.

அரசு அலுவலகங்கள் துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்து உடையவர்களை முழு அளவிலும், அதற்கு கீழ்நிலை அலுவலர்களை 33 சதவீதமும் கொண்டு இயங்கலாம். பெரும்பாலான வணிக, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு.

ஆரஞ்ச் மண்டலம் (ORANGE ZONE):

கார்கள் ஒரு டிரைவர் மற்றும் ஒரு பயணியுடன் அனுமதிக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையே குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் தனி நபர்களும், வாகனங்களும் அனுமதிக்கப்படுவர். 4 சக்கர வாகனங்களில் டிரைவரை தவிர்த்து அதிகபட்சம் 2 பயணிகள் போகலாம். இரு சக்கர வாகனங்களில் பில்லியன் ரைடருக்கு அனுமதி உண்டு.

பச்சை மண்டலம் (GREEN ZONES):

நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட சில நடவடிக்கைகள் தவிர, அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும். பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம். பஸ் டெப்போக்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். குறிப்பிட்டு தடை செய்யப்படாத அனைத்து நடவடிக்கைகளும் இங்கு அனுமதிக்கப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment