Advertisment

நாடு முழுவதும் பொது முடக்கம் மே 17 வரை நீடிப்பு: பச்சை மண்டலத்தில் 50 சதவீத பேருந்துகளுக்கு அனுமதி

ஆரஞ்ச், கிரீன் மண்டலங்களில் மாநில அரசுகள் நிலைமைக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்க மத்திய அரசின் உள்துறை அறிவிக்கை வழிகாட்டுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Team Kashmir lockdown k vijayakumar skandan krishnan - ஒரு மாதமாக காஷ்மீர் கோட்டையை கட்டிக்காக்கும் தமிழக கேடர் அதிகாரிகள்!

India LockDown till may 17, LockDown extends MHA Announced, pm modi, பொதுமுடக்கம் நீடிப்பு, இந்தியா பொதுமுடக்கம், லாக் டவுன்

LockDown News In Tamil: இந்தியா முழுவதும் பொது முடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மே 17 வரை நாடு முழுவதும் இந்த நிலை நீடிக்கும்.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சகம் இன்று பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்கள் நீடித்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மே 3 வரை திட்டமிட்டிருந்த பொதுமுடக்கம், மே 17 வரை நீடிக்கும்.

ரெட் ஸோன் எனப்படும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கீழ்கண்ட நடைமுறைகளை இன்றைய அறிவிப்பு மூலமாக மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. அனைத்து மண்டலங்களிலும் விமானம், ரயில், மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையே சாலை போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள் திறக்க தடை நீடிப்பு

2. ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்க தடை

3. பெரிய கூட்டங்கள் திரளக்கூடாது. திரையரங்குகள் இயங்காது. சமூக, மத, அரசியல் ரீதியான கூட்டங்கள் நடத்தக்கூடாது.

4. இரவு 7 மணி முதல் காலை 7 மணி முதல் தனி நபர் நடமாட்டம் முழுமையாக தடை

5. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் சில நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாகங்கள் எடுக்கலாம்.

6. சிறுவர், சிறுமிகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

7. சிவப்பு மண்டலங்களில் பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும். சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத் தடை தொடரும்.

8. கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம். மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.

9. நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கிராமப்பகுதிகளில் அனைத்து வகையான சிறு கடைகளையும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

10. நகர்புறங்களில் தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுடன் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

11. பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை அனுமதிக்கலாம். பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

12. சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏனைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி செய்ய வேண்டும்.

ரெட் ஸோன் அல்லாத ஆரஞ்ச், கிரீன் மண்டலங்களில் மாநில அரசுகள் நிலைமைக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்க மத்திய அரசின் உள்துறை அறிவிக்கை வழிகாட்டுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

பொது முடக்கம் நீட்டிப்பு: சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை?

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment