மத்திய பிரதேசம்: விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை... துப்பாக்கிச் சூட்டில் 5-பேர் பலி!

போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் விளக்கம்

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது  வன்முறை வெடித்தது. அப்போது, போலீஸார் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வடைந்தது.
 
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கான உரிய கொள்முதல் விலை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள மாண்ட்சோர் பகுதியில் விவசாயிகள் இன்று  நடத்திய போராட்டத்தின் போது  வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்தும் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
 
அப்போது, துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.
 
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது, தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என போலீஸார் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். மேலும், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது: இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close