Advertisment

கொரோனா காலத்தில் தேர்தல்; மாறுபட்ட கருத்தை தெரிவித்த தேர்தல் ஆணையர் வாக்குமூலம் நிராகரிப்பு

வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிகள் மேற்கொண்ட அவதானிப்புகள் பொதுநலன் குறித்து உள்ளதால், ஊடகங்கள் அவற்றைப் செய்தியாக வெளியிடுவதை நிறுத்த முடியாது என்றும் கூறியது.

author-image
WebDesk
New Update
Madras HC censure on Covid polls: Dissenting EC was keen to put views in affidavit, denied

 Ritika Chopra 

Advertisment

Madras HC censure on Covid polls: சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பதிலளித்தமை தொடர்பாக இரு தேர்தல் ஆணையர்களிடையேயான கருத்து வேறுபாடு மிகவும் கூர்மையானது. மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ள தேர்தல் ஆணையர் தனது கருத்துக்களை ஒரு தனி பிரமாணப் பத்திரத்தில் பதிவு செய்ய விரும்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையம் அவருடைய கருத்துகளை தேர்தல் ஆணையத்தின் வாக்குமூலத்தில் இணைக்காமல் நிராகரித்துவிட்டது. மாறுபாட்ட கருத்தை தெரிவித்த தேர்தல் ஆணையர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் "கொலைக் குற்றச்சாட்டுகள்" கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு விடுப்பு மனுவில் (எஸ்.எல்.பி) தனது தனி வாக்குமூலத்தை இணைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வாய்வழி அவதானிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில் அதன் எஸ்.எல்.பி, ஆணைக்குழுவால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படவில்லை.

ஆணையர்களில் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் எஸ்.எல்.பியில் உள்ள கருத்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

புதன்கிழமை வெளியான அறிக்கைக்கு பிறகு தேர்தல் ஆணையம் எந்தவொரு முடிவுகளும் எடுப்பதற்கு முன்னர் தேர்தல் ஆணையம் அது தொடர்பாக விவாதங்களைக் மேற்கொள்ளும் என்று அறிக்கை வெளியிட்டது.

தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து சுனில் அரோரா ஏப்ரல் 12ம் தேதி ஓய்வு பெற்ற பிறகு மூன்று நபர்கள் கொண்ட ஆணையத்தில் சுஷில் சந்திரா தலைமை தேர்தல் ஆணையாராகவும், ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்கள். மூன்றாவது ஆணையருக்கான பதவி காலியாக உள்ளது.

மேலும் படிக்க : உற்பத்தி அளவைக் காட்டிலும் கூடுதலாக தேவைப்படும் ஆக்ஸிஜன்; சமாளிக்குமா தமிழகம்?

தேர்தல் ஆணையத்தின் (தேர்தல் ஆணையர்களின் சேவை நிபந்தனைகள் மற்றும் வணிக பரிவர்த்தனை) சட்டத்தின் பிரிவு 10 ன் படி, தேர்தல் ஆணையத்தின் அனைத்து விவகாரங்களும் முடிந்தவரை ஒருமனதாக பரிவர்த்தனை செய்யப்படும் என்பதாகும்.

"தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் இதுபோன்ற விடயங்கள் பெரும்பான்மையினரின் கருத்தின்படி தீர்மானிக்கப்படும்" என்று இந்த விதி கூறுகிறது.

தேர்தல் ஆணையத்தில் இரண்டு ஆணையர்கள் மட்டுமே இருக்கின்ற பட்சத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யார் கருத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து சட்டம் தெளிவற்றதாக உள்ளது. எனவே, இரண்டு தேர்தல் ஆணையங்களில் ஒருவரால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட வாக்குமூலம் மற்றும் எஸ்.எல்.பி ஆகியவை தேர்தல் ஆணையத்தின் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா இல்லையா என்பது தெளிவாக இல்லை.

கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் கோவிட் வழிகாட்டுதலைகளை தலைவர்கள் மீறுவதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று அது தொடர்பாக கடுமையான கண்டனங்களை சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 26ம் தேதி அன்று வெளியிட்டது. அதற்கான மறுமொழியில் தேர்தல் ஆணையத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது. தற்போது நாம் இருக்கின்ற நிலைக்கு ஒரே காரணம் இந்த தேர்தல் ஆணையம் தான். கொலை குற்றத்திற்கு இது நிகரானது என்று வாய்வழி அவதானிப்புகளை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

பதிவு செய்யப்பட்ட உத்தரவுகள் அல்லது தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்றும் ஊடகங்கள் வாய்வழி அவதானிப்புகளை செய்தியாக வெளியிடுவதை தடுக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுகியது தேர்தல் ஆணையம். ஆனால் உயர்நீதிமன்றம் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இறுதியாக உச்ச நீதிமன்றத்தில், உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது தேர்தல் ஆணையம். அதன் எஸ்.எல்.பியில் தேர்தல் ஆணையம், வழக்கில் நீதிபதிகள் கூறிய வாய்மொழி அவதானிப்புகள் நீதிமன்றத்தின் கருத்துகளாக ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது மாண்புமிகு நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் நீதிமன்றம் உரிமைகளில் எல்லைகளை மீறுகிறது என்றும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

இந்த விவகாரத்தை திங்கள்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிகள் மேற்கொண்ட அவதானிப்புகள் பொதுநலன் குறித்து உள்ளதால், ஊடகங்கள் அவற்றைப் செய்தியாக வெளியிடுவதை நிறுத்த முடியாது என்றும் கூறியது.

நீதிபதி எம்.ஆர். ஷா இது குறித்து பேசிய போது, சில நேரங்களில் பொதுநலனுக்காக அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. நீதிபதிகளும் மனிதர்கள் தான். அவர்கள் விரக்தி அடைகிறார்கள். சில நேரங்களில் கோபம் கொள்கிறார்கள். இதனை உத்வேகமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் ஆணையத்திடம் தெரிவித்தது. உங்களின் இதர முடிவுகள் முக்கியமானவை என்றும் இந்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

தேர்தல் ஆணையம் சுதந்திர ஊடகங்கள் மீது நம்பிக்கை கொண்டதாக கூறியது. "ஆணைக்குழு ஒட்டுமொத்தமாக மற்றும் அதன் ஒவ்வொரு உறுப்பினரும் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அனைத்து தேர்தல்களையும் நடத்துவதிலும், நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் ஊடகங்கள் ஆற்றிய நேர்மறையான பங்கை அங்கீகரிக்கின்றனர். மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் ஊடக அறிக்கையிடலுக்கு தடை விதிக்க எந்த கோரிக்கையும் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் ஒருமனதாக இருந்தது என்று கருத்துக் கணிப்பு குழு தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment