ஆப்ரேஷன் தாமரை: ‘மேஜிக் நம்பர்’-ஐ எட்டிப் பிடிக்க பாஜக பிளான் என்ன?

Operation Lotus : பாரதிய ஜனதா கட்சி 105 எம்எல்ஏக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 40 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மீண்டும் அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.

By: Updated: November 25, 2019, 12:06:33 PM

Sandeep A Ashar, Shubhangi Khapre

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி 105 எம்எல்ஏக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 40 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மீண்டும் அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளத. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று (25ம் தேதி) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பட்னாவிஸ் அரசை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இறுதி தேதியை, உச்சநீதிமன்றம் எதுவும் நிர்ணயிக்காத நிலையில், பட்னாவிஸ் தலைமையிலான பாரதிய ஜனதா அரசோ, நம்பிக்கை வாக்கெடுப்புக்கா நடவடிக்ககைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் மீண்டும் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமையும் பொருட்டு, “ஆபரேசன் லோட்டஸ்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆபரேசன் லோட்டஸ் திட்டத்துக்கு ராதாகிருஷ்ணா விகே பாட்டீல், கணேஷ் நாயக், பாபன்ராவ் பஞ்ச்புடே மற்றும் நாராயண் ரானே தலைமை ஏற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்து சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விகே பாட்டீல் மற்றும் ரானே காங்கிரஸ் கட்சியிலிருந்தும், நாயக் மற்றும் பஞ்ச்புடே தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து இங்கு வந்தவர்கள் ஆவர். இவர்கள் கூறியதாவது, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு பயன்படுத்தும் பொருட்டு, முன்னாள் தலைவர்கள் மற்றும் மற்ற சிறிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 23ம் தேதி (சனிக்கிழமை), கவர்னரை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ.,வின் 105 எம்எல்ஏக்கள், துணை முதல்வர் அஜித் பவாரின் தரப்பில் ஒப்படைக்கப்பட்ட தேசியவாத கட்சியின் 54 எம்எல்ஏக்கள் மற்றும் 14 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார், தனக்கு தேசியவாத கட்சியின் 54 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், 41 எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கு எதிராக திரும்பியுள்ளதால், அஜித் பவார் இதுவரை வகித்து வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் பதவியிலிருந்து கட்சி அவரை நீக்கி அந்த இடத்துக்கு ஜெயந்த் பாட்டீலை நியமித்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்டுள்ள நிலையில், இதன்காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏதாவது ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதா என்பது தொடர்பாக, பா.ஜ. தலைவர்கள் சட்ட வல்லுனர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவராக ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டது செல்லாது என்று பா.ஜ., கருத்து தெரிவித்துள்ள நிலையில், அஜித் பவார் அந்த பொறுப்பில் நீடித்தால் மட்டுமே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும் என்ற உண்மையை பா.ஜ. உணர்ந்து அதற்கேற்ப காய் நகர்த்தி வருகிறது.

இந்திய அரசியலமைப்பின் 10ம் சட்டப்பிரிவின்படி, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் கட்சி விதியை மீறி வாக்கு அளித்தால், அவரை கட்சி விட்டு நீக்கவும் முடியும் அதன்மூலம், அவரது வாக்கு மதிப்பிழக்க செய்ய முடியும்.

இதனிடையே, துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பா.ஜ. – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்த 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை வழங்கும். மக்கள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு பாடுபடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பாரதிய ஜனதா கட்சி, அதற்காக மற்ற கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது மட்டுமின்றி, நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்ற ரகசிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், கடந்த 2014 சட்டசபை தேர்தலின்போதும் 122 எம்எல்ஏக்களை பா.ஜ. தன்னகத்தே கொண்டிருந்தது. 41 எம்எல்ஏக்களை பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து மற்ற கட்சிகளின் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவிலேயே, அங்கு பா.ஜ. ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

105 எம்எல்ஏக்களை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. மேலும் மற்ற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவினை பெற்று பா.ஜ நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று சுயேட்சை எம்எல்ஏ ரவி ராணா கருத்து தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Maharashtra crisis operation lotus bjp prepares for floor test

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X