Advertisment

மகாராஷ்ட்ராவில் சிவசேனா ஆட்சி : ஒரு மனதாக முடிவுகளை மேற்கொண்ட காங்கிரஸ், என்.சி.பி

டிசம்பர் மாதத்திற்கு முன்பே மகாராஷ்ட்ராவில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்று சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maharashtra government formation

Maharashtra government formation

 Manoj C G, Vishwas Waghmode

Advertisment

Maharashtra government formation : மகாராஷ்டிரா மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற இழுபறி அடுத்த 48 மணி நேரத்திற்குள் முடிவிற்கு வர உள்ளது.  காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் சிவசேனாவுடனான கூட்டணியை  ஒருவாராக வியாழக்கிழமை இரவு உறுதி செய்தது.  அதிகாரப்பகிர்வு குறித்து முடிவுகளை மேற்கொண்ட பிறகு சனிக்கிழமைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Maharashtra government formation

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் வியாழக்கிழமை காலை சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து திட்டவட்டமாக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் இன்று மும்பைக்கு வருகை புரிகின்றார்கள்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுடன் இன்று அதிகார பகிருங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. நேற்றிரவு தெற்கு மும்பையில் அமைந்திருக்கும் சரத்பவாரின் சில்வர் ஓக் இல்லத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் அவருடைய மகன் ஆதித்யா தாக்கரே,  சிவசேனா ராஜ்யசபை உறுப்பினர் சஞ்சய் ராவத் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  இன்று காலை உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

சிவசேனா கட்சி அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பான முதலமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ளும். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் துணை முதல்வர்களாக பொறுப்பு வகிப்பார்கள். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும்.  இதர அமைச்சரவைகள் கட்சியின் பலத்தைப் பொறுத்து பகிர்ந்தளிக்கப்படும்.  சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் சரிசமமாக அமைச்சரவை பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள,   இரண்டு இடங்கள் மட்டும் குறைவாக காங்கிரஸ்க்கு வழங்கப்படும் என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் கூறுகையில், முதல்வர் பதவி ரொட்டேஷனில் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை என்.சி.பி. கோரிக்கை வைக்க விரும்புவதாகவும், அது குறித்து அதிகார பகிர்வுக்கான கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார். என்.சி.பி மற்றும் காங்கிரஸ் இரு தரப்பினரும், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை வகிக்க க்ரீன் சிக்னல் காட்டியுள்ளனர்.

தீவிர இந்துத்துவ கொள்கைகளைக் கொண்டுள்ள சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆரம்பம் முதலே அதிகம் யோசனை செய்து வந்தது காங்கிரஸ் கட்சி. மதசார்பற்ற தன்மையை என்றுமே விரும்பும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றத்தை விரும்பவில்லை. காமன் மினிமம் ப்ரோகிராமில் தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை மனதில் கொண்டு ஆட்சி அமைக்கப்படும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டு அமைக்கப்படும் இந்த அரசு அதில் கூறப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை காக்கும் வகையில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பிரித்திவிராஜ் சாவனை சந்தித்த பிறகு காங்கிரஸ் மற்றும் என்.சி.பி தலைவர்கள் ஒருமனதாக முடிவுகள் மேற்கொண்டிருப்பதாகவும், கூட்டணியின் இதர சாராம்சங்களை சிவசேனாவுடன் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்தார்கள். டிசம்பர் மாதத்திற்கு முன்பே மகாராஷ்ட்ராவில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்று சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : வெளிநாடு தப்பிச் சென்றாரா நித்தியானந்தா? காணாமல் போன அந்த இரண்டு பெண்கள் எங்கே?

All India Congress Shivsena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment