Advertisment

மகாராஷ்டிராவில் அரசமைப்பதில் என்.சி.பி - காங்கிரஸ் எந்த பங்கும் வகிக்காது - சரத்பவார் பேட்டி

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பதில் அவருடைய கட்சி எந்தவொரு பங்கையும் வகிக்காது என்று கூறினார். தனது கட்சியும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியில் அமர உள்ளதாகக் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sharad pawar, sharad pawar on maharashtra government formation, maharashtra news,சரத்பவார், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக, மகாராஷ்டிரா அரசியல், bjp shiv sena, shiv sena, uddhav thackeray, amit shah, sanjay raut, ncp-congress, Tamil indian express

sharad pawar, sharad pawar on maharashtra government formation, maharashtra news,சரத்பவார், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக, மகாராஷ்டிரா அரசியல், bjp shiv sena, shiv sena, uddhav thackeray, amit shah, sanjay raut, ncp-congress, Tamil indian express

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பதில் அவருடைய கட்சி எந்தவொரு பங்கையும் வகிக்காது என்று கூறினார். தனது கட்சியும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியில் அமர உள்ளதாகக் கூறினார்.

Advertisment

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், “அரசாங்கத்த அமைப்பதில் எனக்கு பங்கு இல்லை. எதிர்க்கட்சியில் அமர மக்கள் எங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர். நாங்கள் எங்கள் பங்கை திறம்பட செய்ய தயாராக உள்ளோம். அரசு அமைப்பதில் நான் எந்தப் பங்கிலும் ஈடுபடவில்லை. அடுத்த சில நாட்களுக்கு நான் மும்பையில் இல்லை, ஏனெனில் நான் புனே, சதாரா, காரட் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறேன்”என்று கூறினார்.

வரவிருக்கும் மாநிலங்களவை அமர்வு கூட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக ராவத் உடனான சந்திப்பு இருந்தது என்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணை இல்லை என்று சரத்பவார் சுட்டிக்காட்டினார்.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக - சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் பெரும்பான்மையாக வென்ற போதிலும், மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்த பின்னணியில், ஒரே வாரத்தில் ராவத் உடன் சரத்பவார் இரண்டாவது முறையாக சந்தித்தார். சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியைக் கோரும் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய இரு கட்சிகளுடனும் தொடர்பில் உள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜக-சிவசேனா பிளவு குறித்து கருத்து தெரிவித்த சரத்பவார், “சேனா-பாஜக கடந்த 25 ஆண்டுகளாக ஒரு கூட்டணியில் உள்ளனர். இன்று அல்லது நாளை அவர்கள் ஒன்றாக வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜக போர்க்குணமிக்க சிவசேனாவுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களை முன்வைத்து ஒருநால் கடந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் சிவசேனா முதலமைச்சர் பதவியில் எந்த சமரசமும் ஏற்படாது என்பதை தெளிவுபடுத்தியது.

மும்பையில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸின் இல்லமான வர்ஷாவில் மூத்த பாஜக தலைவர்கள் சந்தித்த பின்னர், பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், “மகாராஷ்டிராவில் வாக்காளர்கள் பாஜக மற்றும் சிவசேனாவுக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர். எனவே, நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம். சிவசேனா தரப்பிலிருந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் வழங்கவில்லை… அவர்கள் விரைவில் எங்களுக்கு ஒரு திட்டத்தை தருவார்கள். அந்த திட்டத்தை விவாதிக்க, பாஜகவின் கதவுகள் 24 மணிநேரமும் திறந்திருக்கும்” என்று கூறினார்.

முன்னதாக, சிவசேனா தலைவர் சஞ்ஜய் ராவத் பாஜகவிடமிருந்து சிவசேனாவுக்கு புதிய முன்மொழிவு எதுவும் கிடைக்கவில்லை என்றும், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் பாஜகவுக்கும் அவரது கட்சிக்கும் இடையே முதலமைச்சர் பதவியைப் பகிர்வது குறித்து ஒருமித்த கருத்து இருப்பதாகக் கூறினார். தேர்தலுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டதை அமல்படுத்துவதை சிவசேனா எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார்.

“புதிய திட்டங்களுக்கு ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்டவை குறித்து நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். புதிய திட்டம் எதுவும் பெறப்படவில்லை அல்லது அனுப்பப்படவில்லை” என்று ராவத் கூறினார்.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ராவத் கூறுகையில், “அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். இதைச் செய்ய சதி செய்பவர்கள் மக்களின் அதிகாரத்தை அவமதிக்கிறார்கள்” என்று கூறினார்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவும் சிவசேனாவும் மொத்தம் 161 இடங்களை வென்றுள்ளன. இது ஆட்சி அமைக்கத் தேவையான 145 உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் மேல் பெரும்பான்மை பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் பெற்றுள்ளன.

முன்னதாக திங்களன்று பவார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். சதிப்புக்குப் பிறகு இரு கட்சிகளும் தங்களது அனைத்து விருப்பங்களையும் வெளிப்படையாக வைத்திருப்பதாக அவர் சமிக்ஞை செய்திருந்தார். இன்றைய நிலவரப்படி ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான உறுப்பினர்கள் இல்லை என்று அவர் கூறினார். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.

Bjp Maharashtra All India Congress Ncp Shiv Sena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment