Advertisment

மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம்... தலைவர்கள் அஞ்சலி...

தண்டியில் அமைந்திருக்கும் காந்தியின் நினைவு மண்டபத்தை நாட்டுக்கு அர்பணிக்க உள்ளார் நரேந்திர மோடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mahatma Gandhi 150 birth Anniversary

Mahatma Gandhi 150 birth Anniversary

Mahatma Gandhi Death Anniversary : இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட லட்சக்கணக்கான இந்தியர்களை அகிச்மையின் வழியில் ஒன்றிணைத்த தலைவர், தேசத்தலைவர், மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம் இன்று.

Advertisment

இந்தியா முழுவதும் சத்தியாகிரகம் என்ற அறவழிப் போராட்டத்தை நடத்தி மக்கள் மனதில் நீங்கா புகழ் கொண்ட தலைவராக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மகாத்மா. 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் மகாத்மா.

Mahatma Gandhi Death Anniversary - தலைவர்கள் அஞ்சலி

இந்த தினத்தை இந்தியா முழுவதும் தியாகிகள் தினம் என்று அனுசரித்து வருகின்றோம். தமிழகத்தில், சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் அண்ணாரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லி ராஜ்காட்டில் அமைந்திருக்கும் அவரின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களின் அஞ்சலியை இன்று காலையில் செலுத்தினர்.

தண்டியில் அமைக்கப்பட்டிருக்கும் காந்தி நினைவு மண்டபம்

நரேந்திர மோடி இன்று உப்பு சத்யாகிரகம் நடைபெற்ற தண்டிக்கு செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் காந்தியின் நினைவு மண்டபம் நாட்டுக்கு அர்பணிக்க உள்ளார் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் மகாத்மா காந்தி காட்டிய வழியில் நாமும் பயணிப்போம் என்றும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் அஞ்சலி

மகாத்மா காந்தியின் கனவுகளை மெய்பிக்குமாறு தலைவர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து தங்களின் அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்தி வருகின்றனர்.

Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment