Advertisment

'குடியுரிமைத் திருத்த சட்டத்தை நாங்கள் கொண்டு வந்தால்?' - மலேசிய பிரதமரின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Malaysian PM Mahathir raises citizenship law India condemns - 'குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசியாவில் கொண்டு வந்தால்?' - மலேசிய பிரதமரின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

Malaysian PM Mahathir raises citizenship law India condemns - 'குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசியாவில் கொண்டு வந்தால்?' - மலேசிய பிரதமரின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசியாவில் கொண்டு வந்தால் என்ன நடக்கும் என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர்.

கிழக்கு டெல்லியில் சீலாம்பூரில் உள்ள ஜாபர்பாத் பகுதியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்த நிலையில் இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசிய பிரதமர் மகாதீர் முகமத் விமர்சித்துள்ளார்.

கோலாலம்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் மலேசிய பிரதமர் பேசிய போது, "மதச்சார்பற்ற நாடு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியா, முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். இதே நடவடிக்கையை நாங்கள் எங்கள் நாட்டில் செய்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இங்கு குழப்பமும், நிலையற்றத்தன்மையும் உண்டாகும். அனைவரும் பாதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மலேசிய பிரதமரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. "உண்மைகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இந்தியாவின் உள்துறை விவகாரங்கள் குறித்து மலேசியா கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். மலேசிய பிரதமரின் கருத்து தவறானது" என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment