Advertisment

‘நான் பிரதமரின் காலில் விழ வேண்டுமா?’ மத்திய அரசு - மே.வ இடையே முடிவில்லா MGREGS பிரச்னை!

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு அரசியல் சூடுபிடித்துள்ளது. முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகள் இல்லாததால் நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அரசு கூறுகிறது; அரசியலுக்காக மக்களை கஷ்டப்படுத்துவதாக மம்தா அரசு குற்றம் சாட்டுகிறது.

author-image
WebDesk
New Update
‘நான் பிரதமரின் காலில் விழ வேண்டுமா?’ மத்திய அரசு - மே.வ இடையே முடிவில்லா MGREGS பிரச்னை!

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு அரசியல் சூடுபிடித்துள்ளது. முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகள் இல்லாததால் நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அரசு கூறுகிறது; அரசியலுக்காக மக்களை கஷ்டப்படுத்துவதாக மம்தா அரசு குற்றம் சாட்டுகிறது.

Advertisment

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடுகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு மேற்கு வங்கத்திற்கு வருகை செய்ததன் மூலம் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். இதனால், வருகிற பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னதாகவே, மேற்கு வங்க மாநிலத்தில் மற்றொரு மத்திய அரசின் திட்டம் உஷ்ணத்தைக் கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்திற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டதிற்கான (MNREGS நிலுவைத் தொகையை மத்திய அரசு கடைசியாகச் செலுத்தியதில் இருந்து டிசம்பர் 26-ம் தேதியுடன் ஒரு ஆண்டு ஆகியுள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் மீண்டும் பிரச்சினையை எழுப்பியது.

சமீபத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம் சங்கர்ஷ் மோர்ச்சா, திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை எழுப்பியது. மேற்கு வங்கத்திற்கு ரூ.7,500 கோடி மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டதிற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று கூறியது.

மத்திய அரசு நிதியை நிறுத்தி வைப்பதற்கு காரணம், மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்றாததுதான் காரணம் என்று மத்திய அரசு சுட்டிக்காட்டியது. இது குறித்து மத்திய அரசைக் குறிவைத்து, மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் நிறுவனர் உறுப்பினர் நிகில் டேயும் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு, ட்வீட் செய்தார்: “மாநில அரசு முறைகேடு இருக்கிறது என்று மத்திய அரசு சொல்கிறது - எனவே நிதியை நிறுத்துங்கள்! யார் கஷ்டப்படுகிறார்கள்?” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் குறிப்பிட்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு பல கடிதங்களை எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் மம்தா பானர்ஜி அனுப்பிய கடிதத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நிதி இரண்டையும் விடுவிக்க பிரதமரின் தலையீட்டைக் கோரினார். மேலும், “மேற்கு வங்கத்தில், இந்திய அரசு கிட்டத்தட்ட ரூ.6500 கோடி - ரூ. 3000 கோடி ஊதியப் பொறுப்புகளுக்கு எதிராகவும், ரூ.3500 கோடி ஊதியம் அல்லாத பொறுப்புகளுக்கு எதிராகவும் மாநிலத்திற்கு நிதியை வெளியிடாததால், நான்கு மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.” என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார்.

மம்தா பானர்ஜி நவம்பரில் கூறுகையில், “நான் தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து அவரிடம் பேசினேன். நான் இப்போது அவருடைய காலில் விழ வேண்டுமா?” என்று கேட்டிருந்தார்.

அதே நவம்பர் மாதம், மேற்கு வங்க பஞ்சாயத்து அமைச்சர் பிரதீப் மஜும்தார் டெல்லியில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனாலும், பணம், நிலுவையில் உள்ளது.

மேற்கு வங்க அமைச்சர் பிரதீப் மஜும்தார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “நாங்கள் நிதி கேட்டு வருகிறோம், ஆனால், இந்த விஷயத்தை கவனிக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.” என்று கூறினார்.

"பரவலான ஊழல், நிதி முறைகேடு ஆகியவற்றின் காரணமாக நிதி தாமதத்திற்கு திரிணாமூல் காங்கிரஸே அரசாங்கமே காரணம் என்று பா.ஜ.க கூறியது. “நிதியை விடுவிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், முதலில் மாநில அரசு ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிதியின் கணக்கைக் கொடுக்க வேண்டும். மாநில அரசு அனுப்பத் தவறினால், மத்திய அரசு ஏன் அதிக நிதி அனுப்ப வேண்டும்” என்று பா.ஜ.க கூறுகிறது.

மக்களுக்கு உண்மை தெரியும் என்று பா.ஜ.க கூறுகிறது. “திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களும் நிர்வாகிகளும் மத்திய அரசின் நிதியை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை கூட மாற்றி, அவற்றை தங்களின் சொந்த திட்டங்களாக நிறைவேற்றினர்… ஆனால், மாநிலத்தின் வளர்ச்சியை மத்திய அரசு தடுக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் அனைத்தும் சரியாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் கூறினார்.

இருப்பினும், இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்பட வாய்ப்பில்லை. மேற்கு வங்கத்திற்கு நிதி வழங்குவதை மத்திய அரசு ஏன் நிறுத்தியது என்று கேட்டதற்கு, ஊரக வளர்ச்சி அமைச்சக அதிகாரி ஒருவர், “மேற்கு வங்கம் மாநிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடுகள நடந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், மாநில அரசு நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகளை அனுப்பவில்லை. மத்திய அரசிடம் இருந்து பலமுறை தொடர்பு கொண்டும் மாநில அரசு முறைகேடுகளைத் தடுக்கவில்லை” என்று கூறினார்.

மேற்கு வங்கத்திற்கான நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று கேட்டதற்கு, அது மாநில அரசாங்கம் விதிகளுக்கு இணங்குவதைப் பொறுத்தது என்று அந்த அதிகாரி கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் அரசும், மத்திய அரசும் மக்களின் உயிருடன் விளையாடுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி குற்றம் சாட்டினார். “நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். அத்தகைய நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். ஆனால், பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு இருவரும் சொந்த நலனுக்காக அரசியல் செய்து வருகின்றனர். இரு கட்சிகளும் ஒரு மறைமுகமான புரிந்துணர்வைக் கொண்டுள்ளன என்று நாங்கள் எப்போதும் கூறுகிறோம்” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) பா.ஜ.க-வையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடியது. அவர்களின் அரசியல் கடினமான உழைப்பாளிகளை வருமானம் இல்லாமல் ஆக்கிவிட்டது என்று கூறியது. திரிணாமூல் காங்கிரஸ் அரசாங்கத்தின் பரவலான ஊழலின் சாட்சியாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கிறோம்” என்று சி.பி.எம் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Mamata Banerjee Tmc Mgnrega
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment