Advertisment

’2024 தேர்தலில் தனித்து போட்டி’; வடகிழக்கு தோல்வியால் தேசிய அரசியல் கனவு குறைவதை பிரதிபலிக்கும் மம்தா பேச்சு

திரிபுராவில் வெற்றிடம் மற்றும் மேகாலயா குறைந்த தொகுதிகள், கோவா தோல்வி; எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் ஆதாரமாக உருவாகும் திரிணாமுல் காங்கிரஸின் நம்பிக்கைக்கு முட்டுக்கட்டை

author-image
WebDesk
New Update
’2024 தேர்தலில் தனித்து போட்டி’; வடகிழக்கு தோல்வியால் தேசிய அரசியல் கனவு குறைவதை பிரதிபலிக்கும் மம்தா பேச்சு

மம்தா பானர்ஜி

Santanu Chowdhury

Advertisment

திரிணாமுல் காங்கிரஸின் தேசிய அபிலாஷைகளுக்கு பெரும் அடியாக, திரிபுராவில் கட்சி மீண்டும் தனது கணக்கைத் திறக்கத் தவறியுள்ளது, மேகாலயாவில் கட்சியால் ஐந்து எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே பெற முடிந்தது.

அதன் பெரிய வங்காள மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது திரிபுராவிற்கு நேரம், ஆற்றல் மற்றும் வளங்களைச் செலவழித்து வருகிறது. மேகாலயாவில், 2021-ல் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய பிறகு, கட்சி முதன்மை எதிர்க்கட்சியாக மாறியது.

இதையும் படியுங்கள்: வடகிழக்கில் மோடியின் பிணைப்பும் ராகுலின் துண்டிப்பும்; காங்கிரஸின் தோல்விக்கு வித்திட்ட ராய்ப்பூர் முடிவு

முன்னதாக, கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் அதன் உயர்மட்ட பிரச்சாரத்தில் தோல்வியுற்றது, கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

வடகிழக்கு முடிவுகளுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கருத்துக்கள் கட்சியின் சிதைந்த தேசிய அபிலாஷைகளை சுட்டிக்காட்டுகின்றன. ”2024 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். மக்கள் ஆதரவுடன் போராடுவோம். பா.ஜ.க.,வை தோற்கடிக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்

இப்போதைக்கு, பா.ஜ.க தலைமையிலான NDA அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஒரு ஊக்கியாக உருவெடுக்கும் துணிச்சல் திரிணாமுல் காங்கிரஸூக்கு இல்லாமல் போய்விட்டது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட சாகர்டிகி தொகுதியில் இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளது, திரிணாமுல் காங்கிரஸின் துயரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

மற்ற எதிர்கட்சிகளும் களமிறங்குவதால், தேசிய அரசியலுக்கான தீவிரப் போட்டியில் ஈடுபட, திரிணாமுல் காங்கிரஸூக்கு மற்றொரு மாநிலத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த செயல்திறன் தேவை என்று கட்சி வட்டாரங்கள் ஒப்புக்கொண்டன. 2021 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து கட்சி இந்த முன்னேற்றத்திற்காக முயற்சி செய்து வருகிறது. மம்தா பானர்ஜிக்கு அடுத்த இடத்தில் உள்ள மருமகன் அபிஷேக் முன்னிலை வகித்ததன் மூலம், பா.ஜ.க.,வின் அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்துவதில் அதன் வெற்றி, துணிச்சலுடன் வெளி வருவதற்கான நம்பிக்கையை அளித்தது.

தேசிய பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்று, தேசிய விரிவாக்கத்தில் பணிபுரிந்த அபிஷேக், கோவா, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய அனைத்து தேர்தல்களிலும் திரிணாமுல் காங்கிரஸிற்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.

திரிபுராவில், நோட்டாவை விட (1.36%) கட்சியின் வாக்கு சதவீதம் (0.88%) குறைவாக இருந்தது. திரிபுராவில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அக்கட்சி 17 சதவீத வாக்குகளைப் பெற்றதால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஆச்சரியம் அடைந்ததை ஒப்புக்கொண்டனர். மேகாலயாவில், காங்கிரஸிடம் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்களால், 0 முதல் 12 எம்.எல்.ஏ.,க்கள் வரை உயர்ந்திருந்தாலும், இந்தத் தேர்தலில் அக்கட்சி 5 இடங்களையும் 13.7 சதவீத வாக்குகளையும் பெற்றது.

கத்தியை சுழற்ற காத்திருந்த மம்தாவின் எதிரியும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் அதன் தேசியக் கட்சி அந்தஸ்தைக் கூட இழக்க வேண்டும் என்று கூறி, தேவையான நடவடிக்கைக்காக தேர்தல் ஆணையத்திற்கு ட்வீட் செய்துள்ளார். "திரிணாமுல் காங்கிரஸ் மிகவும் ஊழல் நிறைந்த பிராந்திய கட்சி" என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

தேசிய அரசியலைப் பற்றி பேசுவதற்கு தார்மீக அதிகாரம் எதுவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று சி.பி.ஐ(எம்) மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறினார். “வங்காளத்தில் நல்லாட்சியை வழங்க முடியாத கட்சி அதிக லட்சியம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அதன் தலைவர்கள் சிறையில் இருக்கும் போது மற்றும் அதன் அரசாங்கத்தால் அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க முடியாத போது, ​​கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்படும், ”என்று சுஜன் சக்ரவர்த்தி கூறினார்.

சாகர்டிகி இடைத்தேர்தல் முடிவு தனிப்பட்ட வெற்றி என்று கூறிய காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் மாநில பிரிவுத் தலைவருமான ஆதிர் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸின் மோசமான செயல்பாடு (தேர்தல் தோல்வி) ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார். “சமூகத்தில் ஊழலுக்கு இடமில்லை. இந்த வாசகம் சுவரில் உள்ளது” என்றார் சௌத்ரி.

இதற்கு பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ், சுவேந்து அதிகாரி பொய்களை பரப்புவதாக குற்றம் சாட்டியது. திரிணாமுல் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் மஜும்தார் கூறியதாவது: கட்சியின் தேசிய லட்சியங்கள் உண்மையில் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேகாலயாவில், எங்களுக்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் உள்ளன, எனவே எங்களிடம் மற்றொரு மாநிலம் உள்ளது.

மஜும்தார் மேலும் கூறியதாவது: தேசிய கட்சியாக மாறுவதற்கான அளவுகோல் சுவேந்து அதிகாரிக்கு தெரியாமல் இருக்கலாம். பி.எஸ்.பி, சமாஜ்வாடி கட்சி மற்றும் சி.பி.ஐ ஆகியவை நாட்டின் எந்தப் பகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாதபோது (பல மாநிலங்களில் உள்ள வாக்குகளின் அடிப்படையில்) தேசியக் கட்சிகளின் அந்தஸ்தை அனுபவிக்கின்றன. சுவேந்து அதிகாரி பொய்யான அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்.

அபிஷேக் பானர்ஜி மூலமான எந்தவொரு தாக்கத்தையும் பற்றி மஜும்தார் கூறுகையில், “இந்த முடிவிலிருந்து நாங்கள் நேர்மறையானவற்றை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். எங்கள் கட்சி வங்காளத்தை தாண்டி மேகாலயாவில் தொகுதிகளை வென்றுள்ளது. நாங்கள் மற்ற மாநிலங்களில் இப்போது தான் நுழைந்துள்ளோம் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது நல்லது.” என்றார்.

இருப்பினும், தனிப்பட்ட முறையில், கட்சித் தலைவர்கள் அதன் தலைவர்கள் மீது ஊழல் மேகம் தொங்குவதால் திரிணாமுல் காங்கிரஸுக்கு இழப்பு ஏற்படலாம் என்று அச்சம் தெரிவித்தனர். அதன் தலைவர்கள் பல மோசடிகளில் பெயரிடப்பட்டுள்ளனர், பலர் பொதுமக்கள் பணத்தை கைப்பற்றிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இது பொதுமக்களின் கருத்தை வடிவமைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், ”நம்பகத்தன்மை இல்லாத கட்சி, ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் முதல் நிலக்கரி ஊழல் மற்றும் மாடு கடத்தல் வழக்குகள் வரை, அரசு ஊழியர்களுக்கு DA வழங்காதது வரை எங்கும் ஊழல்... மற்ற மாநிலங்களில் வாக்கு கேட்கும் தார்மீக உரிமை திரிணாமுல் காங்கிரஸுக்கு இருக்கிறதா?... வரும் நாட்களில், வங்காளத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிராகரிக்கப்படும்,” என்று கூறினார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mamata Banerjee Tmc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment