Advertisment

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்துகிறார் மமதா - அதிர் ரஞ்சன் சௌத்ரி

. அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் வராது. எனவே திகைத் மற்றும் டிஎம்சி கட்சி உறுப்பினர்களை அனுமதிப்பது விவேகமானது என்று பாஜக நம்புகிறது.

author-image
WebDesk
New Update
adhir ranjan, bjp, congress

Ravik Bhattacharya

Advertisment

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர், பெராம்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் சில முக்கிய விசயங்களின் தொகுப்பு இங்கே

லக்கீம்பூ கேரி வன்முறைக்கு பிறகு ராகேஷ் திகைத், சந்திர சேகர் ஆசாத் ஆகியோர் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

பூம் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போஎன்ற பிராந்திய கட்சிகளுக்கு ஆளும் பாஜக மற்றும் பாஜக முதல்வர்கள் ஆதரவு அளிக்கின்றார்கள் என்பதன் தெளிவான வெளிப்பாடு தான் இது. இந்த கட்சிகள் மென்மையான அணுகுமுறைகளை கொண்டிருப்பதாக பாஜக நினைக்கிறது. அதனால் அவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் வராது. எனவே திகைத் மற்றும் டிஎம்சி கட்சி உறுப்பினர்களை அனுமதிப்பது விவேகமானது என்று பாஜக நம்புகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைப்பதை நோக்கமாக கொண்டு டி.எம்.சி. காய்களை நகர்த்துகிறது.

ஆனால் பிரியங்கா காந்தியின் உறுதியும் காங்கிரஸின் சமரசமற்ற மனப்பான்மையும் பாஜகவை விட்டுக்கொடுக்க வைத்தது. யோகி ஆதித்யநாத்தின் அரசுக்கு எதிரான அவருடைய வீரம் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் மன உறுதியை மேலும் அதிகரித்தது. மேலும் உறுதியான பாத்திரத்தை அவர் வருங்காலங்களில் வகிப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்

உ.பியில் காங்கிரஸ் வகுக்க இருக்கும் வியூகம் என்ன?

அரசியல் வியூகம் ஏதும் இல்லை. விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கின்றோம். இது மனிதாபிமான, தார்மீக அடிப்படையிலான வெளிப்பாடு ஆகும். அரசியல் வியூகம் கட்சி தலைவர்களால் வகுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். அரசாங்கத்தின் மிருகத்தாமான அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தற்போது போராடும். விவசாயிகள் ஏன் கொல்லப்பட்டனர். அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

அசாம், கோவா, மற்றும் மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் டி.எம்.சி. கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனாலும் காங்கிரஸ் குடும்பத்தில் சேர்வது குறித்து பேசுகிறார்கள். ஏன்?

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் தலைவர்களைக் கவர்ந்து காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் (எம்) கட்சியாக மாற்ற மமதா பானர்ஜி முயற்சி செய்கிறார். அதன் மூலம், மோடியின் ஆட்சியைப் பிடிக்கும் கருவியாக அவர் மாறி வருகிறார். அவர் எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் தரவரிசையில் அவருக்கு முக்கியமான பொறுப்புகளை கொடுத்து ஊக்குவித்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என்று நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரஸ் தலைமையிலான யூ.பி.ஏ. ஆட்சியில் அவருக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டன. இப்போது அதே நபர் தனது அரசியல் லட்சியத்தின் காரணமாக காங்கிரஸை அதன் முதுகில் குத்திக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் ஒரு மென்மையான இலக்கு, ஏனென்றால் அவர் இன்னும் சில காங்கிரஸ் தலைவர்களுடன் நட்பில் உள்ளார்.

டி.எம்.சி. தற்போது புதிய காங்கிரஸ் கட்சியாக உருவெடுக்கிறது என்று நீங்கள் தற்போது கூறுகின்றீர்களா?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 37.36% வாக்குகளை பெற்றிருந்தது. 63% வாக்குகள் பாஜகவிற்கு எதிராக இருந்தது. ஒரு கூட்டணியை உருவாக்க முடியாமல், மோடியின் மிகப்பெரிய செல்வாக்கை தடுக்க முடியாது. மமதா பானர்ஜி அடிபணிய துவங்கினார். ப்ரசாந்த் கிஷோரின் ஐபேக்குடன் இணைந்து வேண்டுமென்றே அடிபணிந்து பாஜகவிற்கு இளைப்பாற இடம் தந்தது. ஒருவர் பிரதமராக வேண்டும் என்று கனவு காண்பது ஒன்றும் நியாமமற்றதல்ல. ஆனால், கூட்டணியை உருவாக்காமல் அது சாத்தியமாகாது. சுவாரஸ்யமாக, டெல்லியில் அமலாக்கத்துறை மமதாவின் உறவினரை விசாரித்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது வாதங்கள் பொய்யை அடிப்படையாகக் கொண்டவை. 1925ம் ஆண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடக்கத்திலிருந்து, காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக அரசியல், கருத்தியல் மற்றும் கலாச்சார ரீதியாக போராடியது . ரயில்வே இலக்காவை பெற்ற மமதா பிறகு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் ஆட்சி மீது ஒரு கண் வைத்திருந்தார். பிறகு அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். மேற்கு வங்கத்தில் இருந்து இரண்டு எம்.பிக்களை அக்கட்சி பெற்றது. அந்த கட்சி இங்கிருக்கும் மக்களுக்கு அந்நியமாகவே இருக்கின்றது. இந்த மாநிலத்தில் பாஜகவை அழைத்து வந்ததற்காக பொதுமக்களிடம் மமதா மன்னிப்பு கேட்க வேண்டும்.

அம்ரிந்தர் சிங் கட்சியை விட்டு நீங்கினார்; பிறகு நவோஜித் சிந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்; பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தான் என்ன?

பஞ்சாபில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான பொறுப்பை வகித்தவ்வர் அம்ரிந்தர். மூத்த தலைவர். ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளில் அவரின் புகழ் மங்கிவிட்டது. ஆளும் கட்சிக்கு எதிரான போக்கு அங்கே நிலவி வருகிறது. அவருடைய பதவி காலம் முடிவுக்கு வருகின்ற போது ஒதுங்கி நிற்குமாறு கட்சி அவரிடம் கேட்டுக் கொண்டது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை நீர்த்துப்போக செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. சித்துவை மிகவும் உணர்வுப்பூர்வமானவர் என்று சிங் கூறினார். சிங்கும் சித்துவைப் போன்றே மிகவும் உணர்வுப்பூர்வமானவர் என்று நான் கூறுவேன். 78 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக இருந்தனர். தனிப்பட்ட ரீதியிலான விரோதம் ஏதும் இல்லை. சித்துவும் நல்ல தலைவர் தான்.

சத்தீஸ்க்ரரிலும் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் டி.எஸ். சிங் தியோவிற்கு இடையே மோதல் இருப்பதாக உணர்கின்றோம்

இது எங்கள் உயர்மட்ட குழுவின் கட்டளைக்குட்பட்டது. அங்கு முதல்வர் பதவி குறித்து என்ன கூறினார்கள் என்று எனக்கு தெரியவ்ல்லை. இருவரும் மூத்த உறுப்பினர்கள், மரியாதைக்குரிய தலைவர்கள். இருவருக்கும் இடையே இருக்கும் கருத்த வேறுபாடுகளை களையும் வகையில் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள். கட்சிக்குள் பிரச்சனைகளை கொண்டிருக்கும் தலைவர்கள் அனைவரிடத்திலும், பாஜகவின் கரங்களுக்கு வலுசேர்க்கும் எந்த செயலையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கட்சி தலைமை குறித்து கேள்வி எழுப்பிய பிறகு, மூத்த தலைவர் கபில் சிபல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இது குறித்து காந்தி குடும்பத்தினர் அமைதியாக இருந்தனர். அது குறித்து

திரு. சிபல் ஏதோ கருத்து கூறினார். சில இளைஞர்கள் அதனால் உணர்ச்சிவசப்பட்டு தக்காளிகளை அவரது வீட்டின் மீது எறிந்தார்கள். அந்த இளைஞர்கள் செய்ததை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் ராகுல் மற்றும் சோனியா காந்தியுடன் எப்போதும் பேசிய முடியும். நாங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கம். எதைப் பற்றியும் நம் தலைமை பொதுவில் பேசுவது பொருத்தமானதா என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment