Advertisment

பின்தொடர்தலின் உச்சம்: மும்பையிலிருந்து டெல்லி வரை பெண்ணுக்கு ‘காதல்’ தொல்லை அளித்த இளைஞர்

மும்பையிலிருந்து டெல்லி வரை இளைஞர் ஒருவர், பெண்ணை பின்தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லைக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
stalking, marriage, love, mumbai, delhi

மும்பையிலிருந்து டெல்லி வரை இளைஞர் ஒருவர், பெண்ணை பின்தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லைக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதுகுறித்து, காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது,

டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தன் படிப்புக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாக மும்பைக்கு குடிபெயர்ந்தார். மும்பையில் உள்ள சில கல்லூரிகளில் தான் படிப்பதற்காக அப்பெண் விண்னப்பித்திருந்தார். அப்போது, அவருக்கு பல புதிய நண்பர்கள் அறிமுகமாகினர். அவ்வாறு அறிமுகமாகிய பி.காம் பட்டதாரி இளைஞர் ஒருவர், அப்பெண்ணை காதலிப்பதாக கூறி அவரை பின்தொடர்ந்து தொல்லைக் கொடுத்ததாகவும், இரவு நேரங்களில் செல்பேசியில் தொடர்புகொண்டு தொல்லை அளித்து வந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், அப்பெண் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்த இளைஞர் வந்து, பல பரிசுகள் அளித்து காதலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது காதலை மறுத்தால் அந்த இளைஞர் தன்னை தாக்கிவிடுவாரோ என்ற பயத்தில், அப்பெண் இதுகுறித்து தன் பெற்றோரிடம் தகவல் அளித்தார். இதையடுத்து, தன் மகளை மீண்டும் டெல்லியில் உள்ள அவர்களது வீட்டுக்கே வந்துவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மும்பையில் தன் படிப்பை தொடர முடிவெடுத்திருந்த அப்பெண், சில மாதங்களிலேயே மீண்டும் டெல்லிக்கே புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதையடுத்து, டெல்லிக்கு சென்ற சில நாட்கள் வரை அனைத்தும் நன்றாக போய்க்கொண்டிருந்தது. ஆனால், ஒருநாள் அப்பெண் வெளியே சென்றிருந்த சமயத்தில், அந்த இளைஞர் டெல்லிக்கே வந்து மீண்டும் அவரை பின்தொடர்ந்து தொல்லைக் கொடுக்க ஆரம்பித்ததாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. வெவ்வேறு செல்பேசி எண்களில் தொடர்புகொண்டு அந்த இளைஞர் தொல்லை அளித்ததால், அப்பெண் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவைத்து, இறுதியில் செல்ஃபோன் உபயோகிப்பதையே நிறுத்திவிட்டார்.

அப்பெண் செல்ஃபோன் உபயோகிப்பதை நிறுத்தியவுடன், அந்த இளைஞர் பெண்ணின் தந்தை மற்றும் மூத்த சகோதரரின் எண்களை கண்டறிந்து அவர்களை தொடர்புகொண்டு தொல்லை அளித்துள்ளார். இதையடுத்து, அப்பெண்ணின் பெற்றோர் பயந்து ஜாஃப்ராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பின்தொடர்தல் மற்றும் மிரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354டி-யின் படி, ஒரு பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். அதன்படி, குற்றவாளிக்கு 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment