Advertisment

'சிஏஏ வாபாஸ் லோ': அமித் ஷா பேரணியில் எதிர் கோஷமிட்ட இளைஞர்

பகத்சிங்கின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருப்பதாக  கூறிய சிங், எங்கெல்லாம் மனிதநேயம் நேயம் தடைபடுகிறதோ அங்கே எழுந்து நிற்பது தனது கடமை என்றும் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
harjit singh, CAA protest,ஹர்ஜித் சிங்,anti caa slogan

harjit singh, CAA protest,ஹர்ஜித் சிங்,anti caa slogan

டெல்லி பாபர்பூரில் கடந்த ஞயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேரணியில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் 20 வயது இளைஞரான ஹர்ஜித் சிங் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்.

Advertisment

அந்த இடத்திலேயே அவர்மீதான வன்முறைகள்  கட்டவிழ்த்து விடப்படிருகின்றன.  இது  குறித்து அவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற நாளிதழிடம் பேசுகையில், "கோஷங்கள் எழுப்பியவுடன், நான் வேகமாக கீழே விழுத்தப்பட்டேன். என்னை அடிக்க பலர் நாற்காலியை தூக்கினார்கள்" என்றார்.

எனது மனநிலம் சரியில்லை என்று ஒப்புக்கொள்ள டெல்லி போலிஸ் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

 

முகம்,முதுகு மற்றும் காலில் ஏற்பட்ட சிறு காயங்களைக் காட்டிய ஹர்ஜித் சிங், ஷாவின் உரையின் நடுவில் “சிஏஏ வாபாஸ் லோ”என்று அழுத்தமாக கத்தினார். அதன்பின், கூட்டத்திடம் இருந்து இதுபோன்ற ஆக்ரோஷமான எதிர்வினைகளை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

டெல்லி காவல்துறையினர் தன்னை காவல் நிலையத்தில் அடைத்து வைத்தார்கள், என்னென்ன குற்றச்சாட்ட்டின் கீழ் தான் அடைகப்படுகிறேன்  என்பது கூட எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. 'நான் மனதளவில் நிலையானவன் அல்ல, நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை" என்ற ஒரு கடிதத்தை எழுத காவல்துறை நிர்பந்தித்தார்கள். நான் கடிதம் எழுதவில்லை என்றால், அவர்கள் இன்று என்னை விடுவித்திருக்க மாட்டார்கள், என்று ஹர்ஜித் சிங் கூறினார்.

ஹர்ஜித் சிங்-ன் குற்றச்சாட்டுகளை மறுத்த துணை போலீஸ் கமிஷனர் வேத் பிரகாஷ் சூர்யா, "அவரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எதையும் நாங்கள் வாங்கவில்லை "  என்று தெரிவித்தார்.

நாங்கள் அவரை மீட்டு முதலில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். எம்.எல்.சி அறிக்கையை பார்த்த பின், பெற்றோர்களுக்கு முறையான தகவல் கொடுத்துவிட்டோம்,”என்று கூறினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்த நிலை பள்ளியில் அரசியல் அறிவியல் பிரிவில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் ஹர்ஜித் சிங், போலிஸ் துறையின் வாதங்களை கடுமையாக மறுக்கிறார்.

எனது உடலின்  வலி காயங்களை காவல் துறையினரிடம் தெரிவித்தேன், இருப்பினுனம் என்னை அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை, நேரடியாக காவல் நிலையத்திற்கு தான்  அழைத்து சென்றனர் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை, அவர் அணிந்திருந்த டீஷர்ட்டில் ,  "இந்தியன்" என்று அச்சிடப்பட்டிருந்தது; திங்களன்று, தி ஹிந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரிடம் அவரின் 17 வயது சகோதரி கிழிந்த அந்த டி ஷர்ட்டை காட்டினார்.

நான் சீலாம்பூரில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளப் போய்க் கொண்டிருந்தேன், பாபர்பூரில் பலத்த போலீஸ் இருப்பதைக் கண்டேன். இது குறித்து நான் அதிகாரிகளிடம் கேட்டபோது, ​​அமித் ஷா வருவதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

நான் அவரைப் பார்த்தேன், எனது எதிர்ப்பை பதிவு செய்ய இது சரியான நேரம் என்று நினைத்தேன்.

குடியுரிமை திருத்தம் சட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஷா பேசத் தொடங்கியதும், சிங்கின் குரல் கூட்டத்தின் வழியாகத் துளைத்தது.

பகத்சிங்கின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருப்பதாக  கூறிய சிங், எங்கெல்லாம் மனிதநேயம் நேயம் தடைபடுகிறதோ அங்கே எழுந்து நிற்பது தனது கடமை என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தம் சட்டத்தில் அரசாங்கம் சில குறிப்பிட்ட மதங்களைக் குறிப்பிடக்கூடாது, மாறாக சிறுபான்மையினர் என்று பொதுவாக கூற வேண்டும்,  என்றும் அவர் கூறினார்.

India Amit Shah New Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment