மத்திய பிரதேச முதலமைச்சரின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது!

விவசாய கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு முறையான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரசேத மாநிலத்தில் விவசாயிகள் பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டத்தின் போது மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சோர் பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருவேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதன்காரணமாக மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை வைவிட வேண்டும், மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் காவரையற்ற உண்ணாவிரத்தை நேற்று தொடங்கினார். விவசாயிகள் தன்னை சந்திக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தாம் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக தெரிவித்தார்.

×Close
×Close