Advertisment

மணிப்பூர் வீடியோ: 62 நாட்கள் கழித்து எப்.ஐ.ஆர்-ஐ தூசி தட்டியெடுத்த காவல்துறை  

மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மே 18ம் தேதி புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 62 நாட்கள் கழித்து 4 பேரை கைது செய்துள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
62 நாட்கள் கழித்து எப்.ஐ.ஆர்-ஐ தூசி தட்டியெடுத்த காவல்துறை

62 நாட்கள் கழித்து எப்.ஐ.ஆர்-ஐ தூசி தட்டியெடுத்த காவல்துறை

மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மே 18ம் தேதி புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,  62 நாட்கள் கழித்து 4 பேரை கைது செய்துள்ளது.

Advertisment

மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை சமந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு அனுப்ப, காவல்துறை ஒரு மாதம் எடுத்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வீடுகளிலிருந்து தப்பியோடி, அடுத்த மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தை அணுகி உள்ளனர்.

இந்நிலையில் மணிப்பூர் சமப்வம் தொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் காவல்துறை தாமதமாக செயல்பட்டதற்கு காரணமாக  மணிப்பூர் முதல்வர் கூறுகையில் “ இதுவரை 6000 வழக்குகளில்  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறை செயல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வீடியோ பதிவு கிடைத்ததும், சமந்த பட்டவர்களை கைது செய்ய காவல்துறை முழு முயற்சி செய்தது. முக்கிய குற்றவாளி உட்பட 2 பேரை கைது செய்துள்ளோம் “ என்று அவர் கூறினார்.

மே 4ம் தேதி மணிபூரின் தவுபல்  மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் கணவர், இந்த சம்பவம் தொடர்பாக மே 18ம் தேதி புகாரை அளித்துள்ளார். ஆனால் வீடியோ வெளியான பிறகுதான் காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4  குற்றவாளிகளில் ஒருவரின் பெயர் ஹுரெம் ஹீரோதாஸ் மெய்தி, மேலும் இவருக்கு வயது 32. மற்றவர்களின் விவரங்களை காவல்துறை இதைத்தொடர்ந்து  வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை முன்னோக்கி செல்லவில்லை. ஆனால் உயர்பதவியில் இருக்கும் முக்கிய நபர்களை மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, மாநிலத்தின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை கண்டறிய மே 27ம் தேதி மணிப்பூர் சென்றிருந்தார்.

மே 29ம் தேதி, மத்திய அமைச்சர் அமித்ஷா, 4 நாட்கள் மணிப்பூர் சென்று, பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பல்வேறு அரசு அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசினார்.

கடந்த  ஜூன் 4ம் தேதி, முன்னாள் கவுகாத்தி  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜை லம்பா தலைமையில் விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

மேலும் கடந்த ஜூன் 24 ம் தேதி எல்லா கட்சிகளை அழைத்து அமித்ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.  

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க 2 மாதங்கள் எடுத்துக்கொண்டது தொடர்பாக, தவுபல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சச்சிதாநந்தா கூறுகையில் சரியான ஆதாரம் இல்லாததால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த வீடியோ தொடர்பாக நேற்றுதான் எங்களுக்கு தகவல் கிடைத்தது. தற்போது எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளதால் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்வோம்” என்று கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் ஆயுதங்கள் திருடு போகாமல் இருக்க காவல்துறையினர் காவல்நிலையத்தை பாதுகாத்துக்கொண்டிருந்தனர் என்று அவர்  கூறினார்.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment