Advertisment

கார் உற்பத்தி 2 நாட்கள் நிறுத்தம் : மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு

Maruti suzuki : குருகிராம் மற்றும் மானேசர் ஆலைகளில் செப்.,7 மற்றும் 9 ஆகிய 2 நாட்கள் முற்றிலுமாக வாகன உற்பத்தியை நிறுத்த உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
maruti suzuki, car production, manesar, gurugram

maruti suzuki, car production, manesar, gurugram, மாருதி சுசுகி, கார் தயாரிப்பு, மனேசர், குருகிராம்

பயணிகள் வாகன உற்பத்தியை 2 நாட்கள் நிறுத்த போவதாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. குருகிராம் மற்றும் மானேசர் ஆலைகளில் செப்.,7 மற்றும் 9 ஆகிய 2 நாட்கள் முற்றிலுமாக வாகன உற்பத்தியை நிறுத்த உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

பங்குச்சந்தை சரிவு, விற்பனை சரிவு ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் ஆட்டோ துறையில் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வருகின்றனர். முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் கடந்த சில நாட்களாக உற்பத்தியில்லா நாட்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி நிறுத்தத்திற்கு காரணங்களாக சொல்லப்படுபவை

1. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டோ துறை கடுமையாக சரிவு வருகிறது.

2. நாட்டில் விற்பனை செய்யப்படும் பயணிகள் வாகனத்திற்கு 2 ல் ஒன்றாக மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்கும்.

3. சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு 2 நாட்களும் உற்பத்தி இல்லாத நாட்களாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

4. மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரை, மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் 3.71 சதவீதம் சரிந்துள்ளன.

5. கடந்த மாதத்தில் மட்டும் உள்நாட்டு சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் மொத்த விற்பனை 35.86 சதவீதம் சரிந்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6. ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 36.14 சதவீதம் சரிந்து 93,173 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

7. உலகிலோயே மிகப் பெரிய ஆட்டோ உற்பத்தி துறையாக விளங்கும் இந்தியாவில் 3.5 கோடிக்கும் அதிகமானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

8. விற்பனை சரிந்ததன் காரணமாக 3000 ஒப்பந்த பணியாளர்களின் ஒப்பந்தத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் கடந்த மாதம் கூறி இருந்தது.

9. ஜூலை மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 30.98 சதவீதமாக இருந்தது. 2000 ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான சரிவாக இது பார்க்கப்படுகிறது.

10. இன்று (செப்.,04) பிற்பகல் 1.07 மணி வரை மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் 2.63 சதவீதம் சரிந்துள்ளது. சென்செக்ஸ் உயர்வுடன் கணப்பட்ட போதிலும் மாருதி சுசுகி நிறுவன பங்குகளின் மதிப்பு உயரவில்லை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment