காதலருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் காதலருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் காதலருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரபிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், கொம்பள்ளியில் உள்ள சிவசிவானி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் தன்னுடைய விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பெண் தன் காதலருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மாத ஆரம்பத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர், தன் காதலியுடன் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close