விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானா: இந்தியா எதிர்ப்பு

Farmers Protest in India :

By: Updated: February 3, 2021, 06:10:57 PM

வெளிநாட்டினர் சிலர் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

இதுதொடர்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ” முழு  கலந்துரையாடலுக்குப் பிறகு புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்வதுடன், சுற்றுச்சூழல் ரீதியாக  நிலையான வளர்ச்சியை  உறுதி செய்கிறது” என்று தெரிவித்தது.

மிகச் சிறிய எண்ணிக்கையிலான விவசாயிகள் மட்டுமே  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போராடும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களை உள்ளடக்கி  விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பதினொரு சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

சர்வதேச பாப் பாடகி ரிஹானா, சுவீடன் நாட்டைச் சார்ந்த பருவநிலை ஆர்வலர் பெண் கிரெட்டா துன்பர்க் ஆகியோர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியது.

 

 

 

நேற்று இரவு பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் கணக்கில், நாம் இதைப் பற்றி ஏன் பேசவில்லை? என்ற கேள்வியுடன் சிஎன்என் வெளியிட்ட செய்தியொன்றை  பகிர்ந்து கொண்டார். அச்செய்தியில் போராட்ட இடங்களில் விவசாயிகள் சந்திக்கும் அவலங்களை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, உலகின் முக்கிய சர்வதேச பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக  போராடும் விவாசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

 

ரிஹானா  பயன்படுத்திய ‘#FarmersProtest’ என்ற  ஹேஷ்டேக் நேற்று இரவு சர்வதேச அளவில் ட்வீட்டரில் வலம் வந்தது.

மேலும், அந்த அறிக்கையில்,” சீர்திருத்த சட்டங்களை சில காலங்களுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு முன்வந்த போதிலும், சில தன்னலவாதிகள் தங்கள் குறுகிய எண்ணம் கொண்ட திட்டங்களை ஆர்ப்பாட்டங்களில் செயல்படுத்த நினைப்பதும், அதன் நோக்கை கெடுப்பதும்  துரிதர்ஷடவசமானது. இதற்கு, இந்திய குடியரசு தினத்தன்று நடந்த சம்பவங்களே சாட்சியாக உள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்ததை குறிக்கும் நினைவு நாளில், தேசிய தலைநகரில் வன்முறை வெடித்தது” என்று தெரிவிக்கப்பட்டது.

 

 


சில தன்னலவாதிகள் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஆதரவைத் திரட்ட முயன்றன. அதே சமயம், உலகின் பல பகுதிகளிலும் மகாத்மா காந்தியின் சிலைகள் இழிவுபடுத்தப்பட்டன. இது இந்தியாவிற்கும், உலகின் அனைத்து நாகரிக சமுதாயத்திற்கும் கவலை அளிப்பதாய் இருந்தது. போராட்டங்களைக் கையாள்வதில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட்டன. நூற்றுக்கணக்கான காவல் அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

 


இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலின் பின்னணியில் இந்த ஆர்ப்பாட்டங்கள்  காணப்பட வேண்டும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசாங்கமும் விவசாய பிரதிநிதிகளுக்கும் மேற்கொண்ட முயற்சிகளையும் வலியுறுத்த வேண்டும். எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் பிரச்சினைகள் குறித்து சரியான புரிதலைப் பெற வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Mea reacts to rihanna greta tweets delhi farmers protest in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X