Advertisment

`இனி அனுமதியில்லாமல் சி.பி.ஐ விசாரிக்க முடியாது!' - பொது ஒப்புதலை ரத்து செய்த மேகாலயா

இனிமேல் மாநில அரசின் அனுமதியின்றி மாநிலத்தில் எந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்க முடியாது. பொது ஒப்புதலை ரத்து செய்த 9 ஆவது மாநிலம் மேகாலயா ஆகும்.

author-image
WebDesk
New Update
`இனி அனுமதியில்லாமல் சி.பி.ஐ விசாரிக்க முடியாது!' - பொது ஒப்புதலை ரத்து செய்த மேகாலயா

சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த பொது ஒப்புதலை மேகாலயா அரசு ரத்து செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் 9 ஆவது மாநிலம் மேகாலயா ஆகும். இந்த நடவடிக்கை, கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

மிசோரம் தவிர, சிபிஐக்கான ஒப்புதலை திரும்பப் பெற்ற மற்ற அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், சிபிஐக்கான பொது ஒப்புதலை மேகாலயா திரும்பப் பெற்றது உண்மைதான். அதற்கான காரணங்கள் எங்களுக்குத் தெரியவில்லை என்றார்.

முன்னதாக, மிசோரம் தவிர, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் சிபிஐக்கு அளித்த ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளது. அதாவது, இனிமேல் மாநில அரசின் அனுமதியின்றி மாநிலத்தில் எந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்க முடியாது.

2015இல் சிபிஐ அதிகாரத்தை திரும்பப் பெற்ற முதல் மாநிலம் மிசோரம் ஆகும். அப்போது, அங்கு முதல்வர் லால் தன்ஹாவ்லா தலைமையிலான காங்கிரல் ஆட்சி இருந்தது. பின்னர், 2018இல் ஜோரம்தங்காவின் கீழ் மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) ஆட்சிக்கு வந்தது. அவர்கள் என்டிஏ கட்சி கூட்டாளியாக இருந்தபோதிலும், சிபிஐக்கான ஒப்புதல் மீட்டெடுக்கப்படவில்லை.

சிபிஐ அதிகாரத்தை திரும்ப பெறும் மாநிலங்களின் கூற்றுப்படி, சிபிஐ தனது விசாரணையில் நேர்மையாகவும், பாரபட்சமாகவும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைக்கும் மத்திய அரசின் கைகளில் உள்ள கருவியாக மாறியுள்ளது என குற்றச்சாட்டினர்.

மேகலாயவில் சிபிஐ அதிகாரம் வாபஸ் உத்தரவுக்கு பின்னால், முதல்வர் கான்ராட் சங்மாவின் சகோதரர் ஜேம்ஸ் பி கே சங்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் சௌபாக்யா திட்டத்தை அமல்படுத்தியதில் ஜேம்ஸ் பெரும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரியது.

சட்டவிரோத சுரங்கம் மற்றும் நிலக்கரி போக்குவரத்துக்கு சிண்டிகேட்களை அனுமதித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, முதல்வர் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் சங்மாவை ராஜினாமா செய்ய வைத்தார்

நவம்பர் 2018 இல், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, 1989 ஆம் ஆண்டு முந்தைய இடது முன்னணி அரசாங்கத்தால் சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை திரும்பப் பெற்றது. ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு சிபிஐ அதிகாரத்தை ரத்து செய்த சில மணி நேரங்களில், மேற்கு வங்கத்தில் மம்தாவும் வாபஸ் பெற்றார்.

இதுகுறித்து மம்தா பேசுகையில், " சந்திரபாபு நாயுடு செய்தது மிகவும் சரியாது. பாஜக தனது சொந்த அரசியல் நலன்களுக்காகவும் பழிவாங்குவதற்காகவும் சிபிஐ மற்றும் பிற அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்றார்.

ஆனால், 2019இல் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு ரத்து செய்ய சிபிஐ அதிகாரத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்ட வந்தார்.

சத்தீஸ்கரில் ஜனவரி 2019 இல் சபூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் சிபிஐ அதிகாரத்தை வாபஸ் பெற்றது. அதனை தொடர்ந்து, பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா, ஜார்க்கண்டு ஆகிய மாநிலங்கள் அடுத்தாண்டில் சிபிஐ அதிகாரத்தை முறையே பறித்தது குறிப்பிடத்தத்து.

English Article Written by  Deeptiman Tiwary

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cbi Meghalaya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment