Advertisment

காங்கிரஸ் இப்படி இருந்தால் பாஜகவுடன் போட்டியிட முடியாது; டி.எம்.சிக்கு கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்

டெல்லிக்கு பலமுறை பயணங்கள் மேற்கொண்டோம். ஆனாலும் கட்சித் தலைமையின் கவனத்தைப் பெற முடியாமல் தோல்வியுற்றோம் என்றும் கூறியுள்ளனர் கட்சி தாவிய மேகாலயா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

author-image
WebDesk
New Update
காங்கிரஸ் இப்படி இருந்தால் பாஜகவுடன் போட்டியிட முடியாது; டி.எம்.சிக்கு கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்

 Sourav Roy Barman 

Advertisment

Meghalaya Congress MLAs join TMC காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறிய ஒரே நாளில் மேகாலயா காங்கிரஸில் இருந்து விலகிய 17 எம்.எல்.ஏக்களில் 12 நபர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும், பல முறை டெல்லிக்கு பயணம் செய்து திரும்பிய போதும் தலைமையின் கவனத்தைப் பெற தவறிவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்தனர். தற்போது காங்கிரஸை மாற்றி, திரிணாமுல் காங்கிரஸ் ஒரு வலுவான சட்டமன்ற எதிர்க்கட்சியாக மேகாலயாவில் உருவெடுத்துள்ளது.

மேகாலயாவின் முதல்வராக 2010 முதல் 18 வரை பணியாற்றிய முகுல் சங்க்மா, ஷில்லாங்கில் நடைபெற்ற செய்தியாளார்கள் சந்திப்பில், கடமை அழைப்பிற்கு பதில் அளிக்க காங்கிரஸ் தவறிவிட்டது என்று கூறினார். தற்போது எதிர்க்கட்சியில் மிகவும் பலம் பொருந்திய ஒரு நபராக அவர் உள்ளார். பல தரப்பட்ட முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் தீர்வானது எட்டப்படாததாக இருந்தது என்பதற்கு நான் வருந்துகிறேன். தலைவர்களின் கவனத்தைப் பெற நாங்கள் எங்களின் சிறப்பான முயற்சியை மேற்கொண்டோம். டெல்லிக்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டோம். ஆனாலும் நாங்கள் தோல்வியுற்றோம் என்று கூறினார் சங்மா. அவருடன் எம்.எல்.ஏ. சார்லஸ் பைங்க்ரோப் உடன் இருந்தார்.

நாடு முழுவதும் ஒரு பலமான மாற்று அரசியல் சக்தி தேவைப்படுகிறது. மேலும், முக்கிய எதிர்க்கட்சியாக கடமையாற்றுவதற்கு காங்கிரஸின் அழைப்புக்கு பதிலளிக்க முடியவில்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார். லிப் சர்வீஸ் மூலம் பாஜகவை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைகின்றோம் என்று எம்.எல்.ஏக்கள் சபாநாயகர்களுக்கு கடித ஒன்றை வழங்கியுள்ளனர். இந்த முடிவானது கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, கடந்த வாரம் ஒரு சந்திப்பு, உட்பட சங்மாவுடன் தொடர் சந்திப்புகளை நடத்திய காங்கிரஸ் தலைமைக்கு ஒரு அடியாக உள்ளது.

2018ம் ஆண்டு தேர்தலில் 21 இடங்களில் வெற்றி பெற்று ஒரு மாபெரும் தனிக்கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. தற்போது ஐந்து எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

மேகாலயா காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் எச் பாலா, எம்எல்ஏக்கள் வெளியேறி திரிணாமுல் காங்கிரஸுடன் கைகோர்ப்பதை எதிர்த்து மிகக்கடுமையாக போராடுவோம் என்று கூறினார். ஆனால் அவர்களின் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்காக உள்ளது என்பதால் கட்சித் தாவல் சட்டம் பொருந்தாது.

கட்சி மாறிய 12 எம்.எல்.ஏக்களில் நான்கு நபர்கள் ஜைந்தியா மலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 8 நபர்கள் கரோ மலையை சேர்ந்தவர்கள். சங்க்மாவின் மனைவி திக்கன்சி டி ஷிரா, மகள் மியானி டி ஷிரா, சங்கமாவின் இளைய சகோதரர் ஜெனித் ஆகியோரும் கட்சி தாவிய எம்.எல்.ஏக்களில் முக்கியமானவர்கள்.

தனி பெரிய கட்சியாக இருந்தும் ஏன் எங்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை? நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்தும் நாங்கள் முயற்சி செய்தோமா? என்று 2018 தீர்ப்பு மற்றும் காங்கிரஸின் ஆட்சியைப் பறிக்க பாஜக கூட்டணி அமைத்ததைக் குறிப்பிட்டு சங்மா கூறினார்.

சங்மாவும் பிங்ரோப்பும், டிஎம்சியுடன் தொடர்புடைய அரசியல் மூலோபாயவாதி பிரசாந்த் கிஷோர் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதற்கு உதவியதாகவும், அக்கட்சி மிகவும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் அதே சமயத்தில் முழுமையான விடாமுயற்சி மற்றும் பகுப்பாய்வுக்கு பிறகு இந்த முடிவ் உறூதியானதும் என்றும் கூறியுள்ளனர்.

கிஷோரால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நண்பராகவும் செயல்பட முடியும். நாங்கள் அவரிடம் பேசிய போது நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான கொள்கையை மக்கள் நலனை கருத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிந்து கொண்டோம் என்று சங்க்மா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Meghalaya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment