ஊரடங்கு உத்தரவை மீறியதாக அமைச்சர் மகனை தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிள் சுனிதா யாதவ், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, காவல்துறை பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சா் குமாா் கனானியின் மகன் பிரகாஷ் கனானியின் நண்பர்கள் சூரத் நகா்ப்பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தபோது சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தினாா்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அவர் “அழுத்தம் தாங்க முடியாமல் காவல் பணியில் இருந்து விலக செய்ய முற்பட்டேன்” என்று தெரிவித்தார். விருப்பத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறிய அவர்,” ஐபிஎஸ் அதிகாரியாகி மீண்டும் மக்களுக்கு பணி செய்ய தயாராக இருப்பதாகவும்” தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சமூக ஊடங்கள் மூலம் தனது கருத்தை பதிவிட்ட சுனிதா ,” இதுவரை ஊடகங்களில் விவாதிக்கப்பட்டவை வெறும் 10 சதவிகிதம் மட்டும் தான், 90 சதவிகித நிகழ்வுகள் பேசப் படவில்லை. நான் ராஜினாமா செய்தவுடன் அதை பொதுமக்கள் முன் வைப்பேன் … எந்தவொரு விளைவுகளையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் … இந்த போரில் நான் மடிந்தாலும், வருத்தமில்லை. எனது சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு எனக்கு உள்ளது, ”என்று தெரிவித்தார்.
மேலும்,“எனது சண்டை சுனிதா யாதவ் என்ற தனிமனிதருக்கனது அல்ல, காக்கி சீருடைக்கானது. தொலைபேசியில் தொடர்ச்சியாக அச்சுருத்தல்களை நான் எதிர் கொண்டேன். ‘நாட்டிற்காக நிறைய செய்து வருகிறீர்கள், நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை’ என்று எச்சரிக்கை வருகிறது. மற்றொரு அழைப்பில், ரூ .50 லட்சத்தை வாங்கிக்கொண்டு விசயத்தை முடித்து விடுங்கள் என்று கூறப்பட்டது. அதன் பிறகு தான், போலீஸ் பாதுகாப்பு கோரி சூரத் போலீஸ் கமிஷனரை அணுகினேன். இந்த அழைப்பு குஜராத்திற்கு வெளியில் இருந்து வந்ததாக தெரிகிறது, ”என்றும் தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்களாக, அவரது வீட்டில் இரண்டு ஆயுதமேந்திய பெண் கான்ஸ்டபிள்களும், குடியிருப்பின் மெயின் கேட்டில் இரண்டு கான்ஸ்டபிள்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். “நான் சாலைகளில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது கூட, சிலர் தன்னை நோட்டமிடுகின்றனர்,” என்று அவர் கூறினார்.
ஜூலை 8ம் தேதியன்று, மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுனிதா, ஊரடங்கு விதிமுறைகளை மீறி வந்த காரை வழி மறைத்தார். காரில் இருந்த ஐந்து பேரை விசாரணை நடத்துகையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானியின் நண்பர்கள் என்றும், அவசர வேலையாக செல்வதால் அனுப்பி வைக்குமாறும் நிற்பந்தித்துள்ளனர். ஆனால், சுனிதா அதற்கு மறுப்பு தெரிவித்தார். பிரகாஷ் கனானிக்கு விசயத்தை தெரிவிக்க, அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். நண்பர்களை விட மறுத்ததால் வாக்கு வாதம் முற்றியது.
#Gujarat. This video has gone viral showing heated arguments between a woman constable Sunita Yadav & son of BJP minister of state for health in Surat over breaking of night curfew rules. Yadav has resigned today apparantly in frustration as her seniors did nothing @DeccanHerald pic.twitter.com/jrieEPgmOm
— satish jha. (@satishjha) July 11, 2020
இதனையடுத்து, ஜூலை 11 ம் தேதி, ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரான தீபக் கோதானி, சஞ்சய் ககாடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கடந்த செவ்வாயன்று, சூரத் பகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) முன்னாள் தலைவர் ராஜுபாய் கோதானி, வராச்சா காவல் நிலையத்தில் ஒரு விண்ணப்பத்தை வழங்கினார். அதில், ” ரோந்து பணியின் போது, சுனிதா தவறான மொழியைப் பயன்படுத்தினார், மக்களை மிகவும் அலட்சியமாக நடத்தினார் என்பதற்கு தானே நேரடி சாட்சி” என்று தெரிவிக்கப்பட்டது. சுனிதா யாதவ் போலீஸ் தலைமையகத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் அவர் இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாதவ் மீது அவர் அளித்த புகாரில், “கடந்த ஜூலை 5ம் தேதி, காரில் சென்று கொண்டிருந்த போது, சுனிதா என்னை வழிமறைத்து நிறுத்தினர்.… நான் முகக்கவசத்தை சரியாக அணியாததால்,பொதுமக்கள் முன்பே என்னைத் திட்ட ஆரம்பித்தார். அங்கு, என்னை அறிந்த சிலர், நடந்ததை கேட்டறிந்தனர். அவருடைய அலட்சிய போக்கை குறித்தும் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். பின்பு, ஊரடங்கு காலத்தில் ஏன் வெளியே வருகிறீர்கள் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். நான் மக்களுக்கு உணவு மற்றும் முகக்கவசங்களை விநியோகிக்கிறேன் என்று அவளிடம் சொன்னபோது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார்… நான் மற்ற இரண்டு பெண் துணை ஆய்வாளர்களை அழைத்து அவர்களின் உதவியை நாடினேன்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பேசிய கோதானி, “ பெண் காவலரின் அணுகுமுறை,பயன்படுத்தும் மொழி, அலட்சியப் போக்கை நேரில் பார்த்தவன். சாலையில் பயணிக்கும் அப்பாவி மக்களை அவர் துன்புறுத்துகிறார், ” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் சுனிதா யாதவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினர். குஜராத் அரசாங்கம் அவரை “பாராட்ட வேண்டும்” என்றும், சத்தியத்திற்கு ஆதரவாக நிற்கும் அவரைப் போன்ற அதிகாரிகளால் காவல்துறை மீதான மரியாதை அதிகரிக்கும்” என்றும் யாதவ் ட்வீட் செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Policewoman who took on ministers son seeks to resign gets protection
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி