Advertisment

இந்திய விமானப்படை தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது எப்படி ?

How IAF Destroyed Jaish Training Camps : இந்த ஆயுதங்கள் அனைத்தும் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mirage, Awacs, Sukhoi, Popeye, How IAF Destroyed Jaish Training Camps, IAF Air Strike Mirage, IAF Surgical Strike

Mirage, Awacs, Sukhoi, Popeye

Mirage, Awacs, Sukhoi, Popeye : 1971ம் ஆண்டிற்கு பிறகு 1999ம் ஆண்டில் இந்திய விமானப்படை தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் 1971ம் ஆண்டிற்குப் பிறகு தற்போது தான் பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவின் விமானப்படை தாக்குதலை நடத்தியது.

Advertisment

கடந்த வாரம் அதற்கான அனுமதி பெற்று, ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது இந்திய விமானப்படை.

இந்த தாக்குதலுக்கு மிகவும் திறமை மிக்க விமானிகள், தரம் வாய்ந்த விமானங்கள், மற்றும் நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் மீது இந்த தாக்குதல் நடைபெற்றது. முதல் தாக்குதலானது ஜபா உச்சியில் அதிகாலை 03:45 நடைபெற்றது. கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் அந்த தாக்குதல் நடைபெற்றது.

நேரில் பார்த்தவர்கள் பிபிசி வேர்ல்ட் (உருது மற்றும் ஹிந்தி) தொலைக்காட்சி வாயிலாக இந்த தகவலை உறுதி செய்தனர். அவர்கள் ஐந்து மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றதாகவும், பூகம்பம் போல் அதிர்வுகளை உருவாக்கியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்

இந்த தாக்குதலை பிரான்சில் உருவாக்கப்பட்ட மிரேஜ் 2000 போர் விமானம் மேற்கொண்டது. இரவு நேரத்திலும் மிகத்துல்லியமாக இலக்கினை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது இந்த போர் விமானம். அப்கிரேடட் நேவிகேசன், ஐ.எஃப்.எஃப். சிஸ்டம், அட்வான்ஸ்ட் மல்டி மோட் மல்டி லெயர்ட் ரேடார் ஆகியவையும் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.

Mirage, Awacs, Sukhoi, Popeye

12 மிரேஜ் ரக விமானங்களுடன் சுகோய் சூ 30 போர் விமானம் 4 ஆகியவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் சுகாய் சூ விமானமானது எதிர் தாக்குதலுக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேல் நாட்டின் ஃபால்கோன் ஏர்போர்ன் வார்னிங் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் (Israeli Phalcon Airborne Warning and Control System (AWACS)) மற்றும் நேத்ரா ஏர்போர்ன் இயர்லி வார்னிங் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் ஏர்கிராஃப்ட் சிஸ்டங்கள் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்கில் போரின் போது ஸ்பைஸ் 2000, க்ரிஸ்டல் மேஜ் மார்க்2 எனப்படும் ஏஜிம் 142 பொபெயே ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டது. இது தான் இந்திய விமானப்படை இலக்குகளை தாக்கி அழிக்க உதவுகிறது.

இஸ்ரேல் நாட்டில் உருவான இந்த ஏவுகணை 90 கி.மீ வரையில் இருக்கும் இலக்கினை தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்பைஸ் 2000 என்பது 2000 பவுண்ட் எம்.கே.84 அன்கெய்டட் பாம்ப். 60 கி.மீ தொலைவில் இருக்கும் இலக்கினை தாக்க உதவுகிறது.

ஃபயர் அண்ட் ஃபர்கெட் வகையான ஆயுதமாகும். ஒருமுறை இலக்கினை செட் செய்து லாஞ்ச் செய்தால் தன்னுடைய இலக்கை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது ஆகும்.

ஹெரான் ஆளில்லா விமானம் இலக்கினை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டுகிறது. இந்த ஆயுதங்கள் அனைத்தும் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : பாலகோட் தாக்குதல் : இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன ?

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment